Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL -அடப்பாவமே.. ! ரஷித் கான் வயிற்றில் குத்திய சர்பிராஸ் கான்.. என்ன நடந்தது? நடவடிக்கை பாயுமா?

டெல்லி : குஜராத், டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரஷித் கானை, சர்பிராஸ் கான் வயிற்றில் மோதி குத்தினார். ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசியது. மெல்லி அணி பேட்டிங் செய்யும் போது, எப்போது எல்லாம் அடிக்க தொடங்கினார்களோ, விக்கெட்டுகள் விழத் தொடங்கியது.

அதனை மீறி டெல்லி பேட்ஸ்மேன்கள் ஏதேனும் பவுண்டரிகளை அடித்தாலும், குறுக்கே இந்த கௌசிக் வந்தா என்ன செய்வ என்ற பாணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் டெல்லி அணியின் இன்னிங்ஸ் டேக் ஆப் ஆகவே இல்லை.

IPL - DC Player Rashid khan collided with Rashid khan during batting

இந்த நிலையில், ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் குஜராத் அணியின் ரஷித் கான் பந்துவீச்சை அடித்து விட்டு டெல்லி வீரர் சர்பிராஸ் கான் ரன் ஓடினார். அப்போது பந்து ஸ்டம்பை நோக்கி வர வேகமாக ஓடிய சர்பிராஸ், பந்தை பிடிக்க வந்த ரஷித் கானின் வயிற்றில் மோதி குத்தினார்.

IPL - DC Player Rashid khan collided with Rashid khan during batting

இதனால் வலி தாங்க முடியாமல், ரஷித் கான் அப்படியே படுத்துவிட்டார். அப்போது சர்பிராஸ் கான் ரஷித் கானை முதலில் பார்க்காமல் எங்கே அவுட் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ரன்னை நிறைவு செய்துவிட்டு, உடனே ரஷித் கானை பார்க்க சென்று, மன்னிப்பு கோரினார்.

இது தெரியாமல் நடைபெற்ற விபத்து என்று ரீப்ளேவில் தெரிந்ததால், சர்பிராஸ் கான் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிகிறது. அதே போல் சர்பிராஸ் கான் பேட்டிங் செய்யும் போது ஷாட் ஆடினார். அப்போது பந்து அவருடைய ஹேல்மட்டில் பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தார்கள்.

Story first published: Tuesday, April 4, 2023, 23:29 [IST]
Other articles published on Apr 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+