For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL - வார்னர் அவுட்டாகியும் தொடர்ந்து ஆட்டம்.. தவறான விதியால் தப்பித்தார்..வஞ்சிக்கப்படும் பவுலர்கள்

டெல்லி : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டெல்லி ஃபிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி ஆடுகளம் இந்தப் போட்டியில் வழக்கத்திற்கு மாறாக பந்து கணிக்க முடியாத அளவு ஸ்விங் ஆனது. ஆடுகளத்தில் இருந்த புற்களால் பந்து இவ்வாறு செயல்பட்டது. இதனால் முகமது ஷமி பந்தின் ஸ்விங்கை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

IPL DC vs SRH - David Warner was very lucky after ball hits the stump

இதனால் பந்து அங்கேயும், இங்கேயும் ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பர் சாஹாவின் திறமையை கடுமையாக சோதித்தது. கால்பந்து போட்டியில் வரும் கோல் கீப்பர் போல் பந்தை பிடிப்பதற்காக சாஹா பாய்ந்து , பாய்ந்து பிடித்து எனக்கா வயசாயிடுச்சி என்பதை ரசிகர்களுக்கு காட்டினார்.

இந்த நிலையில் , முகமது ஷமி வீசிய ஓவர் ஒன்றில் பந்து வார்னரின் ஸ்டம்பில் பட்டு சென்றது. முதலில் இது வார்னரின் பேட்டில் பட்டதா என்று குஜராத் வீரர்கள் சந்தேகம் அடைந்தனர். ஆனால் அது ரிப்ளேவில் பந்து ஸ்டம்பில் பட்டு சென்றது தெரியவந்தது. ஆனால் இதற்கு அவுட் வழங்கப்படாது.

காரணம், கிரிக்கெட் விதிப்படி, ஸ்டம்ப்பின் பைல்ஸ் கீழே விழுந்தால் தான் அது அவுட்டாக கருதப்படும். தற்போது எல்இடி லைட்கள் பொருந்திய பைல்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பந்து ஸ்டம்பில் பட்டாலும், அது கீழே விழாமல் இருக்கிறது. ஏற்கனவே பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக ரூல்ஸ்கள் மாறிவரும் நிலையில்,கனமான பைல்ஸ்கள் வைப்பதன் மூலம் பந்து ஸ்டம்பில் பட்டால் கூட ஆட்டமிழக்காமல் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

Story first published: Tuesday, April 4, 2023, 20:49 [IST]
Other articles published on Apr 4, 2023
English summary
IPL DC vs SRH - David Warner was very lucky after ball hits the stump IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+