
டெல்லி
இந்த தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காகக் விளையாடினார். இரண்டு வருடமாக பஞ்சாப் அணிக்காக இவர் விளையாடினார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் இந்த முறை டெல்லி அணிக்கு மாறினார். பஞ்சாப் அணி இவரின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது டெல்லிக்கு இவர் மாறி உள்ளார்.

நல்ல பவுலிங்
இந்த போட்டியில் அஸ்வின் மிகவும் நன்றாகவே பவுலிங் போட்டு வந்தார். ஒரே ஓவர்தான் இவர் போட்டார். ஆனால் அந்த ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். பஞ்சபாபின் முக்கியமான கருண் நாயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார்.

என்ன நடந்தது
6வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் கடைசியில் அஸ்வின் பந்து வீசிவிட்டு மிட் ஆன் நோக்கி சென்று பந்தை பிடிக்க சென்றார். அந்த பந்தை அவர் பிடிக்காமல் விட்டு இருந்தாலும் எதுவும் நடந்து இருக்காது. ஆனால் ஏனோ மிட் ஆன் நோக்கி சென்ற பந்தை, வேகமாக தாவி பிடிக்க சென்றார்.

ஆனால் அஸ்வின்
ஆனால் அஸ்வின் வேகமாக விழுந்ததில் அவர் மைதானத்தில் ஓ என்று கத்தினார். உடனே மருத்துவர்கள் வந்து அவரை சோதனை செய்தனர். அவரின் கையை சோதனை செய்தனர். ஆனால் அவர் கை நகர முடியாமல் துடித்தார். இதனால் அவர் கையில் கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னணி
அவர் வேகமாக விழுந்ததில் இப்படி அடிபட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவருக்கு தோள்பட்டை எலும்பு விலகி இருக்க வாய்ப்புள்ளது என்று முதல் கட்ட தகவல்கள் வருகிறது. நன்றாக ஆடி வந்த அஸ்வின் முதல் போட்டியிலேயே காயம் அடைந்துள்ளார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இவர் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











