Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரமாட்டியா.. களத்திலேயே கோபம் அடைந்த தவான்.. "சின்ன பையன்" பிரித்வியுடன் மோதல்.. பரபரப்பு!

துபாய்: டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியில் இளம் வீரர் பிரித்வியிடம் சக வீரர் தவான் கோபம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

IPL 2020: Dhawan Run Out on zero vs Punjab | OneIndia Tamil

டெல்லிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் ஐபிஎல் தொடரின் இரண்டாது போட்டி நடந்து வருகிறது. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் பதவி ஏற்று இருக்கிறார். இவர் பஞ்சாபி அணியின் கேப்டனாக ஆடும் முதல் போட்டி இது என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றது.

சுவாரசிய சம்பவம்

சுவாரசிய சம்பவம்

இந்த போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே சுவாரசிய சம்பவம் ஒன்று நடந்தது. இந்த ஓவரை சமி வீசினார். அப்போது பேட்டிங் செய்த ஷிகர் தவான், லேசாக சமியை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். சமியின் இந்த நிலையில், சமியின் ஷார்ட் பால் ஒன்று, தவான் பேட்டில் பட்டு கீப்பர் கே எல் ராகுலிடம் சென்றது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பந்து பிடிக்க கூடிய தூரத்தில் இல்லை. இதனால் பந்து அவரின் கையில் பட்டு பறந்தது. இதை பிடிக்க வேகமாக கே எல் ராகுல் ஓடினார். இதை பார்த்ததும் சமி கோபம் அடைந்தார். இப்படி கேட்சை விட்டு விட்டாரே என்று சமி கோபம் அடைந்தார். ஆனால் வேகமாக செயல்பட்ட கே எல் ராகுல் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயன்றார்.

தவான் கோபம்

தவான் கோபம்

அப்போது பேட்டிங் செய்து வந்த தவான் ஒரு ரன் எடுக்க முயன்றார். பிரித்வி முதலில் ரன் ஓடுவது போல ஓடிவிட்டு, திடீரென்று பின் வாங்கினார். ஆனால் அதற்குள் தவான் பாதி கிரீஸ் தாண்டி விட்டார். இதை பயன்படுத்திக் கொண்டு, கே எல் ராகுல், தாவனை ரன் அவுட் செய்தார்.

செம கோபம்

செம கோபம்

தான் அவுட்டானது தெரிந்ததும், தவான் கடும் கோபம் அடைந்தார். உடனே பிரித்வியை அவர் கோபமாக '' ஏன் ஓடி வரவில்லை'' என்பது போல திட்டினார். அதோடு ப்ரித்வியை அதன்பின் திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றார். இதை பார்த்து, பிரித்வி அதிர்ச்சி அடைந்தார்.

மிக மோசம்

மிக மோசம்

தவான் அவுட்டாகி காரணமாக இருந்த ப்ரித்வி அதற்கு பின்னாவது சரியாக ஆடி இருக்கலாம். ஆனால் அதற்கு அடுத்து மீண்டும் சமி போட்ட பவுலிங்கில் தேவை இல்லாமல் சுற்று அவுட்டானார். அதே ஓவரில் ஹெட்மெயரும் அவுட்டனர். தவான் இதனால் டக் அவுட்டும், பிரித்வி 5 ரன்களுக்கும் அவுட்டனார்கள்.

Story first published: Sunday, September 20, 2020, 20:07 [IST]
Other articles published on Sep 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+