Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் அதிரடியால் புனேயிடம் வீழ்ந்தது ஹைதராபாத்.. கடைசி பந்து வரை த்ரில்

புனே: டோணியின் அதிரடியால் புனே சூப்பர் ஜியான்ட் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக, டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது புனே.

IPL: Finisher MS Dhoni seals RPS win with last-ball four

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் வார்னர் 43, ஹென்ரிகியூஸ் 55 ஷிகர் தவான் 30 ரன்கள் எடுத்தனர். புனே தரப்பில் ஜெயதேவ் உனட்கட், டேனியல் கிறிஸ்டியன், இம்ரான் தாகிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து பேட் செய்த புனே அணியின் தொடக்க வீரர் ரஹானே 2 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 27 ரன்களிலும் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் முக்கிய கட்டத்தில் 10 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுமுனையில் அசராமல் ஆடிய டோணி, தனது பழைய ஹெலிகாப்டர் ஷாட்டுகளை பறக்கவிட்டார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டோணி பவுண்டரி அடித்து புனே அணியை வெற்றிபெறச் செய்து தான் இன்னும் சிறந்த ஃபினிஷர்தான் என்பதை நிரூபித்தார். 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன், 61 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார் டோணி. 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்து மற்றொருமுனையில் பக்கபலமாக நின்றார் மனோஜ் திவாரி.

Story first published: Saturday, April 22, 2017, 20:00 [IST]
Other articles published on Apr 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+