For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.200 கோடி-ல் இருந்து ரூ.550 கோடி.. விண்ணை முட்டும் ஐபிஎல் அணிகளின் வருமானம்.. எப்படி இந்த ஜாக்பாட்

மும்பை: ஐபிஎல் அணிகளின் அடுத்த 5 ஆண்டுகால லாபம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வை காணவுள்ளது.

Recommended Video

IPL 2023 BCCI கொடுத்த Mega Offer ரசிகர்கள் கொந்தளிப்பு! | *Cricket

ஐபிஎல் தொடரின் 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஒளிபரப்பு உரிமை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தின் மூலம் சர்வதேச அளவில் அதிக பண மழை கொட்டும் தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.

ஐபிஎல்-ல் பண மழை

ஐபிஎல்-ல் பண மழை

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மொத்தமாக 4 பிரிவுகளாக ஏலம் விடப்பட்டது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உரிமம் ரூ.48,390 கோடிக்கு ஏலம் போயுள்ளது. டிஸ்னி ஸ்டார் நிறுவனம், ரிலையன்ஸ் வியாகாம், டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் 4 பிரிவுகளின் கீழ் உரிமைகளை கைப்பற்றியுள்ளது.

அணிகளுக்கும் பயன்

அணிகளுக்கும் பயன்

இந்நிலையில் பிசிசிஐ-யுடன் சேர்த்து ஒவ்வொரு ஐபிஎல் அணியும் பல கோடிகளில் லாபத்தை அதிகரித்துள்ளது. அதாவது, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் வரும் பணத்தில் 50 % தொகையை ஐபிஎல் அணிகளுக்கு பிரித்து தரப்படும். அந்தவகையில் ஏலத்தொகை அதிகரித்ததால், அணிகளின் லாபமும் அதிகரித்துள்ளது.

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

அடுத்த 5 ஆண்டுகளின் ஐபிஎல் அணிகளின் வருமானம்

ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் தலா ரூ.201.65 கோடி பெற்றது.

ஐபிஎல் 2023 & 2024 : ஒவ்வொரு அணியும் தலா ரூ.436.6 கோடி பெறும்.

ஐபிஎல் 2025 & 2026 : ஒவ்வொரு அணியும் தலா ரூ.495.6 கோடி பெறும்

ஐபிஎல் 2027 : ஒவ்வொரு அணியும் தலா ரூ.554.6 கோடி வரை வருமானம் ஈட்டும்.

 இதர வருமானங்கள் என்ன

இதர வருமானங்கள் என்ன

ஒளிபரப்பு உரிமை மட்டுமல்லாது, விளம்பரங்களில் வரும் வருமானத்திலும் ஐபிஎல் அணிகளுக்கு 50% பங்கு உண்டு. இதே போல டிக்கெட் விற்பனை, தனிப்பட்ட விளம்பரங்கள் என அணிகளின் வருமானம் ஏகபோகத்திற்கு எகிறவுள்ளது.

Story first published: Wednesday, June 15, 2022, 16:17 [IST]
Other articles published on Jun 15, 2022
English summary
IPL Franchise Revenue ( ஐபிஎல் அணிகளின் வருமானம் எவ்வளவு ) ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகான ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணியின் வருமானமும் பல மடங்கு உயர்வை கண்டுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+