For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி சிறப்பான விஷயத்த செஞ்சுட்டு சைலண்டா இருக்காங்களே ராஜஸ்தான் அணி?

டெல்லி : ஐபிஎல்லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில் ராஜஸ்தான் அணி செய்துள்ள செயல் அனைவரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி பேட்டிங்

ராஜஸ்தான் அணி பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

பாட் கமின்ஸ் நன்கொடை

பாட் கமின்ஸ் நன்கொடை

கொரோனாவால் இந்தியாவில் பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து காணப்படும் நிலையில், மிகுந்த சிரமத்திற்கிடையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்லின் கேகேஆர் பௌலர் பாட் கமின்ஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவிகளை செய்து வருகின்றனர். அவர் 50,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரூ.7.5 கோடி நிதியுதவி

ரூ.7.5 கோடி நிதியுதவி

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் அணியாக கொரோனா பாதிப்புகளுக்கு ஆக்ஸிஜன் வாங்குவதற்காக இன்றைய தினம் ரூ.7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவும்வகையில் இந்த நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் தெவித்துள்ளது.

ஆர்ஆர் நிதியுதவி

ஆர்ஆர் நிதியுதவி

ராயல் ராஜஸ்தான் பவுண்டேஷன் மற்றும் பிரிட்டீஸ் ஏசியன் ட்ரஸ்ட் (பேட்) இணைந்து இந்த நிதியை வழங்கியுள்ளது. இந்த பேட் டிரஸ்டின் நிறுவனர் பிரின்ஸ் சார்லஸ் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கும் வகையில் இந்த நிதியை திரட்டியுள்ளதாக ஆர்ஆர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கவனம் கொள்ள திட்டம்

கவனம் கொள்ள திட்டம்

இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தை கருத்தில் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ராயல் ராஜஸ்தான் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு விஷயங்களில் கவனம் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அந்த பவுண்டேஷனின் தலைவர் ரஞ்சித் பார்த்குர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 29, 2021, 18:01 [IST]
Other articles published on Apr 29, 2021
English summary
The funds raised by Rajasthan Royals will help pan India, with an initial focus on the state of Rajasthan -RR says
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+