Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Gossips: போகிற இடத்திற்கு எல்லாம் ஜாதியை தூக்கிட்டு போனா எப்படி? சர்ச்சையில் மூத்த வீரர்..பகீர்!

சென்னை: ஐபிஎல் தொடரில் கலக்கும் வீரர் ஒருவர், தற்போது முக்கியமான சிக்கல் ஒன்றில் மாட்டி இருக்கிறார். தனது செயல் காரணமாக இவர் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது என்று கூட கூறலாம். பல கிராமத்து வீரர்கள், வறுமையான குடும்ப பின்னணி கொண்ட வீரர்கள் பலர், வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் பலர் இதனால் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஜாதி ஆதிக்கம், நெப்போட்டிசம், பொருளாதார ஆதிக்கம் இந்தியாவில் வெகுவாக மறைந்தது. இந்திய அணியில் பல புதிய திறமையான வீரர்கள் வரவும் கூட இதுவே காரணமாக இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டும் கூட ஒரு வீரர் மட்டும், இப்போதும் போகிற இடங்களில் எல்லாம் தனது ஜாதி குறித்து பேசி வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது. ஆம், ஐபிஎல் தொடரின் மூத்த வீரர் அடிக்கடி ஜாதியை குறித்து பேசி வருகிறாராம். பெரும்பாலும் பிரபலங்கள் இப்படி செய்யவில்லை என்றாலும் அந்த ஒரு வீரர் அப்படி வெளிப்படையாக செய்வதாக புகார் வந்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

தன்னுடைய சமூக வலைதள போஸ்ட்களில் இவர் தனது ஜாதியை கொஞ்சம் உயர்த்தி போஸ்ட் செய்ததுதான் சர்ச்சைக்கு காரணம் என்கிறார்கள். இதனால் அவரை நெட்டின்சன்கள் பலர் கிண்டல் செய்தனர். என்ன பாஸ் இந்த காலத்தில் ஜாதியை பத்தி இப்படி வெளிப்படையாக போடுறீங்க, இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேட்டு இருக்கிறார்கள்.

திறமையான வீரர்

திறமையான வீரர்

அந்த குறிப்பிட்ட வீரர் மிகவும் திறமையானவர். தனது திறமையை பல முறை அணியில் விளையாடி நிரூபித்து இருக்கிறார். அதேபோல் நான் ஜாதி காரணமாக வாய்ப்புகளை பெறவில்லை . உண்மையில் எனக்கு திறமை இருந்தது. அதனால் வாய்ப்புகளை பெற்றேன் என்று பல முறை அவர் நிரூபித்து இருக்கிறார். ஆனாலும் சமூக வலைதள போஸ்ட்களில் மட்டும் ஜாதி குறித்து அவ்வப்போது பேசி வருகிறார்.

செய்யவில்லை

செய்யவில்லை

இதுதான் அவர் மீது வைக்கப்படும் புகார்களுக்கு காரணம். ஆனால் இவர் மற்ற ஜாதிகளை பற்றி தவறாக பேசவில்லை. அதேபோல் வன்முறை தூண்டும் வகையில் பேசவில்லை. அவர் தனது ஜாதியை ஸ்டைலாக சொல்கிறார். இதில் தவறென்ன இருக்கிறது. இதை எல்லாம் பெரிதாக பேசலாமா என்று அவருக்கு சிலர் ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

செய்தது இல்லை

செய்தது இல்லை

அதேபோல் அவர் பழகும் போது ஏற்றுத்தாழ்வு எல்லாம் பார்த்தது இல்லை. எல்லோரிடம் நன்றாகவே பேசுகிறார். அவர் அப்படிப்பட்ட நபர் கிடையாது. அவர் தனது சமூக வலைதளத்தில், ஸ்டைலாக இப்படி பேசுகிறார் என்றும் அவருக்கு நெருக்கமான சிலர் குறிப்பிட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் இவரை கடுமையாக பலர் விமர்சித்து வருகிறார்கள். இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த புகார்கள் எதற்கும் அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.

Story first published: Saturday, September 19, 2020, 2:11 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+