Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்:டோணியின் புனே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரெய்னாவின் குஜராத் லயன்ஸ்

ராஜ்கோட்: டோணியின் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியும், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. டாசில் வென்ற டோணி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

 IPL: Gujarat Lions versus won

புனே அணிக்கு துவக்கமாக டு பிளஸ்ஸிஸ், ரஹானே களமிறங்கினர். அதிரடி காட்டிய ரகானே பிரவீண் தாம்பே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

இதையடுத்து டு பிளஸ்ஸிஸுடன் இணைந்தார் கெவின் பீட்டர்சன். இருவரும் நிதானமாக விளையாடிய அதே நேரத்தில் புனே அணியின் ஸ்கோர் கிடுகிடு என உயர்ந்தது. புனே அணி 12-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. 34 பந்துகளில் அரை சதம் கண்டார் டு பிளஸ்ஸிஸ்.

இதனிடையே அடித்து ஆட முயன்ற பீட்டர்சன், பிராவே பந்தை அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 37 ரன்களை எடுத்தார். பீட்டர்சனைத் தொடர்ந்து டு பிளஸ்ஸிசியும் அவுட் ஆனார்.

பிரவீண் தாம்பே பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்ற அவரை விக்கெட் கீப்பர் திணேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்தார். அவர் 43 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் (5), மிட்சல் மார்ஷ் (7), வெளியேறினர். முடிவில் பிரவோ வீசிய 20 ஓவரில் கேப்டன் டோணி 2 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசினார். அவர் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மறுமுனையில் பாண்ட்யா (0) அவுட் ஆகாமல் இருந்தார்..

ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஜடேஜா, தாம்பே ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

புனேவை தொடர்ந்து ஆடிய குஜராத் அணிக்கு ஆரோன் பின்ச், மெக்கல்லம் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. அதிரடியாக அடித்து ஆடிய பின்ச் 50 ரன்கள் எடுத்தார். இஷாசந்த் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாத மெக்கல்லம் 49 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் இணைந்த ரெய்னா, பிராவோ ஜோடி வெற்றியை உறுதி செய்தது. ரெய்னா 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் குஜராத் 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராவோ (22), ஜடேஜா (4) அவுட் ஆகாமல் இருந்தனர்.

Story first published: Friday, April 15, 2016, 10:24 [IST]
Other articles published on Apr 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+