Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து வீரர்களை மேம்படுத்தி கொடுத்திருக்கு... வீரர்களோட நம்பிக்கை சிறப்பாகியிருக்கு..

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கவுள்ளது.

இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் கேப்டன் இயான் மார்கன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் இங்கிலாந்து வீரர்களின் நம்பிக்கையை பெருமளவில் பெருக்கியுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டி20 தொடர் துவக்கம்

டி20 தொடர் துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் இன்று முதல் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கவுள்ளது. இன்றிரவு 7 மணியளிவில் போட்டி துவங்கவுள்ளது.

அதிகரித்த தன்னம்பிக்கை

அதிகரித்த தன்னம்பிக்கை

இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணியின் குறைந்த ஓவர்களின் கேப்டன் இயான் மார்கன், ஐபிஎல் போட்டிகளின் மூலம் இங்கிலாந்து வீரர்கள் அதிகளவில் பலனடைந்துள்ளதாகவும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து

சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து

ஐபிஎல் போட்டிகளின்மூலம் கடந்த 2019 உலக கோப்பை மற்றும் 2 டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் சிறப்பாக இங்கிலாந்து அணி செயலாற்ற ஐபிஎல் போட்டிகள் மிக சிறந்த காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகளவிலான அனுபவமும் தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இயான் மார்கன் நன்றி

இயான் மார்கன் நன்றி

ஐபிஎல் தங்களது வளர்ச்சியில் மிகச்சிறந்த பங்கு வகித்து வருவதற்கு நன்றி கூறுவதாகவும் இயான் மார்கன் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி சூழல்களில் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்த தெளிவையும் ஐபிஎல் போட்டிகள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 12, 2021, 13:42 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+