For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ஸ்ரேயாஸ் செய்த வேலை.. ஐபிஎல் வரலாற்றிலேயே படுமோசமான ரெக்கார்டை செய்த மேக்ஸ்வெல்

அகமதாபாத்: ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் செய்திருக்கிறார். அவர் இதுவரை ஐபிஎல் தொடர்களில் மொத்தமாக 19 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரின் அதிக டக் அவுட் எண்ணிக்கை ஆகும்.

இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் இந்த மோசமான சாதனையை செய்துள்ளார். ஆனால், இந்த மோசமான சாதனையை அவர் செய்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் முக்கிய காரணமாக இருந்தார்.

IPL History Punjab Kings Glenn Maxwell Sets Unwanted Record for Most Ducks

அதிலும் 130 இன்னிங்ஸ்களில் மட்டும் விளையாடி அவர் 19 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். அவர்கள் இருவரும் 18 முறை டக் அவுட் ஆகி உள்ளனர். ஆனால், அவர்கள் 200 இன்னிங்ஸ்களுக்கும் அதிகமாக விளையாடியுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் அவுட்டே ஆகவில்லை. அம்பயரின் தவறான முடிவாலும், அதை ரிவ்யூ செய்யாததாலும் அவர் ரன் எடுக்காமல் டக் அவுட்டானார்.

இந்த போட்டியில் மேக்ஸ்வெல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். அப்போது 11 வது ஓவரின் போது மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

சாய் கிஷோர் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால் பந்து மேக்ஸ்வெல்லின் காலில் பட்டது. சாய் கிஷோர் அவுட் கேட்டபோது அம்பயர் உடனடியாக எல்பிடபிள்யூ முறையில் அவுட் என அறிவித்து விட்டார். அதன் பின் அதை ரிவ்யூ செய்யலாமா? வேண்டாமா? என கிளென் மேக்ஸ்வெல் எதிரில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயருடன் பேசினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ரிவ்யூ செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கினார். அதை ஏற்று கிளென் மேக்ஸ்வெல் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் ரீப்ளேவில் அது அவுட் இல்லை என்று தெரிய வந்தது. சாய் கிஷோர் வீசிய பந்து ஸ்டம்பில் படவில்லை. அப்போது ரிவ்யூ கேட்டிருந்தால் நிச்சயமாக கிளென் மேக்ஸ்வெல் தப்பி இருப்பார்.

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் பேச்சைக் கேட்டு ரிவ்யூ செய்யாததால் அவர் ஐபிஎல் வரலாற்றின் படுமோசமான சாதனையை செய்ய நேர்ந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 243 ரன்கள் சேர்த்து பின்னர் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செய்தி சுருக்கம்:

  • ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் படைத்தார்.
  • அவர் இதுவரை 19 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
  • அம்பயரின் தவறான முடிவு மற்றும் ரிவ்யூ எடுக்காததால் அவர் இந்த மோசமான சாதனையை நிகழ்த்தினார்.
  • ஸ்ரேயாஸ் ஐயர் ரிவ்யூ செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்.
  • ரீப்ளேவில் அது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.
  • பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
Story first published: Wednesday, March 26, 2025, 12:47 [IST]
Other articles published on Mar 26, 2025
English summary
IPL History: Punjab Kings Glenn Maxwell Sets Unwanted Record for Most Ducks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+