Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையுடன் இன்று மோதல் - வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

மும்பை: தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் சந்திக்கவுள்ளது.

3 நாட்களுக்கு முன்புதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய தெம்பில் உள்ளது மும்பை. இந்தப் போட்டியில்தான் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டினார் சச்சின்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற சச்சின் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ். பேட்டிங்கில் சச்சின் சரியான பார்மில் உள்ளதால் சென்னை அணிக்கு சற்று கஷ்டம்தான்.

மேலும், ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் ஆகிய ஸ்டார் பந்து வீச்சாளர்களும் மும்பையிடம் உள்ளனர். இளம் வீரர் செளரப் திவாரியும் அசத்திக் கொண்டிருக்கிறார்.

டெல்லிக்கு எதிராக ஒரு அரை சதமும், கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு அரை சதமும் போட்டு பேட்டிங்கில் தனது வலுவான நிலையை ஆணித்தரமாக வெளிப்படுத்தி வருகிறார் சச்சின்.

மறுபக்கம், தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கிறது சென்னை. கேப்டன் டோணி இல்லாதது ஒரு பெரும் பலவீனம். மாத்யூ ஹெய்டன் நல்ல பார்மில் உள்ளது ஒரு ஆறுதல். பந்து வீச்சில் முரளிதரன் அசத்திக் கொண்டிருக்கிறார். கூடவே பாலாஜியும் நல்ல துணையாக இருக்கிறார்.

இருப்பினும் வெற்றி மட்டும் சென்னையை விட்டு விலகி நீண்ட நாளாகிறது. இன்றைய போட்டியிலாவது சென்னை வெல்லுமா என்று அதன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+