Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் இல்லாம இன்னிங்சா... என்ன மாதிரியான சாதனை... மும்பை ஐபிஎல் வரலாற்றுலயே முதல்முறை!

மும்பை : நேற்றைய ஐபிஎல் 2021 தொடரின் 7வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Chris Morris போன ஆட்டம் ZERO இந்த ஆட்டம் HERO தரமான பதிலடி |Oneindia Tamil

இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை அடித்திருந்தது.

இந்த போட்டியில் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

7வது போட்டி

7வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 7வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதத்தை கடந்திருந்தார்.

வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இலக்கை சிறப்பாக சேஸ் செய்து 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் டேவிட் மில்லர், கிறிஸ் மோரீஸ் உள்ளிட்டவர்கள் சிறப்பாக ஆடினர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

தனது முதல் போட்டியை சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. அணியின் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்து அந்த போட்டியில் வெற்றி பெற செய்தனர். இந்நிலையில் தற்போதைய டெல்லி அணியின் இந்த தோல்வி ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது.

வான்கடே மைதானத்தில் முதல்முறை

வான்கடே மைதானத்தில் முதல்முறை

இதனிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் தனது இன்னிங்சை முடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. அரைசதம் அடித்திருந்த போதிலும் கேப்டன் ரிஷப் பந்த்தும் சிக்ஸ் அடிக்கவில்லை. ஆயினும் 9 பவுண்டரிகளை அவர் நேற்றைய போட்டியில் அடித்திருந்தார்.

39 சிக்ஸ்கள்

39 சிக்ஸ்கள்

கடந்த இரு போட்டிகளில் சேர்த்து வான்கடே மைதானத்தில் 39 சிக்ஸ்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு சிக்ஸ்கூட அடிக்காத இன்னிங்சை வான்கடே மைதானம் சந்தித்துள்ளது. முன்னதாக ஈடன் கார்டனில் ஆர்சிபியும் ஜெய்ப்பூரில் சிஎஸ்கேவும் சிக்ஸ் அடிக்காத இன்னிங்ஸ்களை சந்தித்துள்ளன. ஆனால் வான்கடேவில் இது முதல்முறை.

பவுண்டரி அடிக்காத மோரீஸ்

பவுண்டரி அடிக்காத மோரீஸ்

இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் கிறிஸ் மோரீஸ் 18 பந்துகளில் அவுட்டாகாமல் 36 ரன்களை அடித்திருந்தார். அவர் நேற்றைய போட்டியில் ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய அவர் சிறப்பாக விளையாடி 36 ரன்களை குவித்தார்.

Story first published: Friday, April 16, 2021, 12:28 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+