Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''அபிராமி, அபிராமி... ஐபிஎல் அசிங்கம்''- டால்மியா திடீர் புலம்பல்!

கொல்கத்தா: ஐபிஎல் சுத்தமாக இல்லை. ஊழல் மண்டிப் போய்க் கிடக்கிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.

7வது ஐபிஎல் தொடருக்காக அணிகள் எல்லாம் ஆயத்தமாகி வரும் நிலையில் அசிங்கம் பிடித்ததாக அது இருக்கிறது என்று டால்மியா கூறியிருப்பதை பலரும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஐபிஎல் நிர்வாகம் சுத்தமாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதன் பண விவரம் முறையான கணக்கு வழக்குகளுக்குட்பட்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் டால்மியா.

இதுதொடர்பாக அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

அப்பவே நான் சொன்னேன்

அப்பவே நான் சொன்னேன்

கடந்த ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்ட விவகாரம் வெடித்துக் கிளம்பியபோதே ஐபிஎல்லை சுத்தப்படுத்த நான் 12 அம்ச தூய்மைத் திட்டத்தை வாரியத்திற்குக் கொடுத்தேன். ஆனால் அதை தூக்கி வீசி விட்டது ஐபிஎல் நிர்வாகக் குழு.

துடைச்சுக் கழுவ வேண்டும்

துடைச்சுக் கழுவ வேண்டும்

ஐபிஎல் மகா அசிங்கமாக இருக்கிறது. ஊழல் படிந்து கிடக்கிறது. இதைச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அன்று முதல் இன்று வரை நான் தொடர்ந்து அதையே வலியுறுத்தி வருகிறேன்.

பணம் எங்கிருந்து வருகிறது.. எப்படிப் போகிறது

பணம் எங்கிருந்து வருகிறது.. எப்படிப் போகிறது

ஐபிஎல் அணிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அது எங்கு போகிறது என்பதற்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லை. அதை நாம் சரி செய்தாக வேண்டும். சில அணிகள் குறித்து பெரும் சர்ச்சைகளும் உள்ளன.

முத்கல் கமிட்டி விசாரணை சரியில்லை

முத்கல் கமிட்டி விசாரணை சரியில்லை

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி முத்கல் கமிட்டி விசாரணை சரிவர நடப்பதாக தெரியவில்லை. என்னிடம் வந்து விாசரணை நடத்தி பல தகவல்களைக் கேட்க அவர்கள் ஆசைப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் இதுவரை வரவில்லை. ஏன் இவ்வளவு தாமதம்... என்று கூறியுள்ளார் டால்மியா.

சீனிவாசனுக்கு ஆப்பு வைக்கப் போகிறாரோ...

சீனிவாசனுக்கு ஆப்பு வைக்கப் போகிறாரோ...

டால்மியாவின் இந்த திடீர் போர்க்கொடி பலரை சந்தேகப் பார்வை பார்க்க வைத்துள்ளது. காரணம், கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனைப் பழிவாங்கும் வகையில் டால்மியா இறங்கியிருக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

சீனிவாசனால் இடைக்காலத் தலைவரானாவர்

சீனிவாசனால் இடைக்காலத் தலைவரானாவர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அசைக்க முடியாத தலைவராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் டால்மியா. கடந்த ஆண்டு ஏற்பட்ட ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்திற்குப் பின்னர் சீனிவாசனுக்கு பெரும் நெருக்கடி ஏற்படவே அவர் தற்காலிகமாக தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். அப்போது டால்மியாவைத்தான் அவர் இடைக்காலத் தலைவராக நியமித்திருந்தார்.

ஐபிஎல் தலைவர் பதவி கொடுக்காததால் ஏமாற்றம்

ஐபிஎல் தலைவர் பதவி கொடுக்காததால் ஏமாற்றம்

இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பதவிக்கு குறி வைத்திருந்தார் டால்மியா. ஆனால் சீனிவாசன், தனக்கு நெருக்கமான ரஞ்சிப் பிஸ்வாலை அப்பதவிக்கு கொண்டு வந்து விட்டார். இதனால் டால்மியா அப்செட் ஆனார்.

இதன் காரணமாக அவர் தற்போது ஐபிஎல்லுக்கு எதிராக கிளம்ப முயற்சிக்கிறாரோ என்ற கருத்துக்கள் வலுப்பட்டுள்ளன.

Story first published: Sunday, January 12, 2014, 16:04 [IST]
Other articles published on Jan 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+