Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL KKR VS RCB - கோலி, ஷாரூக்கானை விடுங்க.. அந்த பொண்ண பாருங்க.. ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த தேவதை

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான கொல்கத்தாவை, ஆர்சிபி அணி முதலில் பொளந்தது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி , முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கு காரணம், இங்கு கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், பந்துவீசிய அணி 7 முறையும் வென்று இருக்கிறது.

ஈடன் கார்டன் மைதானத்தில கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 181 ஆகும். இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய பொறுப்பில் கேகேஆர் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் போட்டி நடைபெறுவதால் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானும் வந்திருந்தார்.

IPL KKR vs RCB - Who is mysterious Beautiful girl in KKR camp

ஆனால் கொல்கத்தாவின் ஆட்டம் கூடி இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மந்தீப் சிங் டக் அவுட்டாகியும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நிதிஷ் ரானா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் கேகேஆர் அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேகேஆர் அணி உரிமையாளர்களுடன் அமர்ந்திருந்த பெண் ஒருவர் சோகமாக இருந்தார். அந்த பெண்ணை பார்த்த உடன், ரசிகர்கள் ஆட்டத்தை பார்ப்பதை மறந்துவிட்டு, அந்த பெண்ணையே பார்த்து வந்தார்கள்.

இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் அந்த பெண் வைரலாகி வருகிறார். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் என்று நெட்டிசன்கள் அதிகளவில் தேடி வருகின்றனர். இது வேறு யாரும் கிடையாது. பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனயா கபூர் ஆவார். ஆர்சிபி ரசிகர்களே, ஷனயா கபூரின் முகம் வாடும் படி , விளையாட வேண்டாம். கேகேஆரை விளையாட விடுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, April 6, 2023, 21:36 [IST]
Other articles published on Apr 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+