Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் கிட்ட கோச்சிங் கிளாஸ்.. கேப்டன்சியில் தெறிக்கவிடும் கேஎல் ராகுல்..IPLல் மிரட்டல் ரெக்கார்ட்

ஜெய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கருதப்பட்ட கே எல் ராகுல், அந்த பதவிக்கு தகுதி இல்லாத நபர் என ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால் டெஸ்ட் அணியில் துணை கேப்டன் என்ற பதவியை கூட ராகுல் இழந்தார்.

மேலும் ஐபிஎல் தொடரில் ராகுல் கடந்த சீசனை பிளே ஆப் சுற்று வரை வந்தாலும் சில தவறான முடிவை கேப்டனாக எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் காலம் அனைத்தையுமே மாற்றும் என்பதை உணர்த்தும் வகையில் கேல் ராகுல் தனது தவறிலிருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.

kl rahul captaincy

ஏனென்றால் கே என்ற ராகுலின் கேப்டன்சி நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக லக்னோ அணியின் மென்டர் கம்பீரமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். கம்பீர் பட்டறையில் கே எல் ராகுல் நன்றாக பட்டை தீட்டப்பட்டு இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. 155 ரன்கள் என்ற இலக்கு எல்லாம் ராஜஸ்தான் போன்ற அணிக்கு மிகவும் எளிதானது. இத்தனைக்கும் ராஜஸ்தான அணி 11 ஓவர் முடிவிலே 81 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது.

இதனால் அந்த அணிதான் வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்த நிலையில் ராகுல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடுகளத்தை நன்றாக கணித்த கே எல் ராகுல், இது 180 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் கிடையாது என்பதை புரிந்து கொண்டு குறைந்தபட்ச இலக்கை யாவது எதிரணிக்கு நிர்ணயித்தார்.

kl rahul lsg

இதேபோன்று ராஜஸ்தான் அணி விளையாடும் போது பத்து ஓவருக்கு மேல் ஆடுகளும் மிகவும் தோய்வாக மாறிவிடும் என்பதை உணர்ந்த ராகுல், ரவி பிஷ்னாய் ஆட்டத்தின் பிற்பகுதியில் கொண்டு வந்து நெருக்கடியை ஏற்படுத்தினார். அதேபோன்று ராஜஸ்தான் வெற்றியின் பக்கம் வந்தாலும் களத்தில் கூலாக செயல்பட்டு இருக்கிறார்.

எப்போதுமே ஒரு கேப்டனின் திறமையை நாம் நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக தற்காத்துக் கொள்ளும் போதுதான் தெரிய வரும். அந்த வகையில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி கடந்த 11 போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசி தற்காக்கும் போது ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் ராகுல் கேப்டனாக தேறி வருகிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் ராகுல் எடுக்கும் முடிவுக்கு பின்னால் கம்பீர் என்ற மாஸ்டர் மைண்ட் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். எனினும் கம்பீரிடம் இருந்து ராகுல் கொஞ்சமாவது இந்த வித்தை எல்லாம் கற்றுக் கொண்டிருப்பார் என நம்பலாம்.

Story first published: Thursday, April 20, 2023, 0:35 [IST]
Other articles published on Apr 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+