Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லா பக்கமும் நெருக்கடி.. கோலி மீது கோபத்தில் டீம் மேனேஜ்மென்ட்.. ஆர்சிபியில் நடக்க போகும் அதிரடி!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பெங்களூர் அணி விளையாடும் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணியின் கேப்டன் கோலி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் எப்போதும் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறும் அணி என்றால் அது பெங்களூர்தான். எல்லா வருடமும் ''ஈ சாலா கப் நம்தே'' என்று பிரச்சாரம் செய்வதோடு அந்த அணியின் பணி முடிந்து வருகிறது. எல்லா வருடமும் மோசமாக சொதப்பி வெளியேறுவதே பெங்களூர் அணியின் வேலை.

நல்ல பேட்டிங், சுமாரான பவுலிங் இருந்தும் கூட பெங்களூர் அணி எல்லா சீசனிலும் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறி வருவதே வேலையாக இருக்கிறது.இந்த நிலையில் பெங்களூர் மீதான எதிர்பார்ப்பு இந்த முறை அதிகம் உள்ளது.

நெருக்கடி என்ன

நெருக்கடி என்ன

இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கோலி இருக்கிறார். எல்லா சீசன் போல இந்த சீஸனும் கோலி அமைதியாக இருக்க முடியாது. எப்படியாவது செமிபைனல், அல்லது பைனல் வரை பெங்களூரை அவர் கொண்டு செல்ல வேண்டும்.

கட்டாயம் கட்டாயம் வேண்டும்

கட்டாயம் கட்டாயம் வேண்டும்

நேற்று வந்த சின்ன பையன் ஷ்ரேயாஸ் எல்லாம் டெல்லியை தூக்கி வழி நடத்தும் போது, பெங்களூரை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியில் இவரின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்பதையும் இதை வைத்து கங்குலி மற்றும் பிசிசிஐ தீர்மானிக்க வாய்ப்புள்ளது. கோலியின் கேப்டன்சி பதவி 2021 டி20 தொடருக்கு முன் பறிபோகுமா என்பதும் இந்த ஐபிஎல் தொடரில் தெரிந்து விடும்.

கோபம் அணி நிர்வாகம்

கோபம் அணி நிர்வாகம்

அதேபோல் ஆர்சிபி அணி நிர்வாகமும் கோலி மீது கோபத்தில் இருக்கிறது. சரியாக அணியை வழி நடத்தவில்லை என்று புகார் உள்ளது. இந்திய அணிக்கு பல ஜாம்பவான்களை கொடுத்தது கர்நாடக மாநிலம். ஆனால் அவர்களால் ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று டீமும் மேனேஜ்மேண்ட் கோலி மீது கோபத்தை திருப்பி உள்ளது .

ஆரோன் ஆரோன் பின்ச்

ஆரோன் ஆரோன் பின்ச்

அதோடு தற்போது ஆர்சிபி அணியில் ஆரோன் பின்ச் இணைந்து இருக்கிறார். இதனால் அவரும் கோலிக்கு மாற்றாக கேப்டனாக எதிர்காலத்தில் வருவாரா என்றும் கேள்விகள் எழுந்தது. ஆனால் ஆரோன் பின்ச் துணை கேப்டன் போல செயல்படுவார். கோலிக்கு மாற்றாக வர மாட்டார். ஆர்சிபி இன்னும் அவ்வளவு பெரிய முடிவை எடுக்க தயார் ஆகவில்லை. ஆனால் ஆரோன் பின்ச் கோலிக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கூறுகிறார்கள்.

கோலி அறிவுரை

கோலி அறிவுரை

கோலிக்கு பின்ச் பெரும்பாலும் வழி காட்டியாக இருப்பார். அணி நிர்வாகத்தின் கோபத்திற்கு மேலும் ஆள் ஆகாமல் விளையாட வேண்டிய கட்டாயம் பெங்களூர் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இன்று போட்டி நடக்கும் துபாய் மைதானம் நேற்று பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் பெங்களூர் அணிக்கு இப்போதே ஹைதராபாத் அணியின் பவுலிங் சவாலாக உருவெடுத்து உள்ளது .

செம சவால்

செம சவால்

ஹைதராபாத் அணியில் ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் என்று வலுவான பவுலர்கள் இருக்கிறார்கள். இதனால் பெங்களூர் அணியின் வெற்றி இப்போதே சந்தேகமாக மாறியுள்ளது. இதனால் பெங்களூர் பெரும்பாலும் ஸ்டெயினையும்,சாஹாலையும் நம்பி களமிறக்கும். ஆரோன் பின்ச் , பர்திவ் பட்டேல் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Monday, September 21, 2020, 15:21 [IST]
Other articles published on Sep 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+