For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறக்க முடியாத ஐபிஎல் போட்டி.. 2011ஆம் ஆண்டு பைனலில் ஆர்சிபியை சிஎஸ்கே வீழ்த்தியது எப்படி?

சென்னை: 2011ஆம் ஆண்டு மே மாதம் சென்னை M A சிதம்பரம் ஸ்டேடியம். நிரம்பி வழிந்தது, ஆர்வமுள்ள ரசிகர்களுடன் எதிர் பார்ப்போடு. ஐ பி எல் பைனல் மேட்ச்.ஆர் சி பி டீமிற்கும், சி எஸ் கே டீமிற்கும் இடையே. டாஸ் வென்ற எம் எஸ் தோனி பேட்டிங் விளையாட முடிவு செய்தார்.இரண்டு அணிகளும் சிறப்பாக இது வரையில் விளையாடவே, பைனலில் மீட் செய்கின்றனர்.

எதிர்பார்ப்புக்கள் அதிகம் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் ஐ பி எல் ரசிகர்கள் உலகம் எங்கும். மைக்கேல் ஹஸ்ஸியும், முரளி விஜயும் வெகு சிறப்பான ஆட்டங்களை அளித்தனர்.குறிப்பாக முரளி விஜயின் ஆட்டம் வேற லெவல்.ஆர் சி பி யின் சிறந்த பவுலர்களுக்கு பந்துக்களை எப்படி, எங்கே வீசுவது என்றே புரியவில்லை, மேட்ச் போகப் போக.

IPL - Look at 2011 Final How CSK Beat RCB

முதல் ஓவரில் 5 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது ஓவரில் முதல் சிக்ஸர் அடிக்கப் பட்டது. விஜய் அடைத்த பந்து மிட் விக்கெட் திசையில் பறந்தது. பந்து வீசியவர் அரவிந். ஸ்கோர் 16.
தானும் சளைத்தவர் இல்லை என்று ஹஸ்ஸியும் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். ஸ்கோயர் லெக்கில் ரன் கூடியது.
ரன்கள் அதிகரித்தன.

ஐந்தாம் ஒவரில் மிட் விக்கெட் பகுதியில் 6. ஜே எஸ் மொஹமத் பந்தில். அடித்தது ஹஸ்ஸி. ஸ்கோர் 48 ரன்கள். ஹஸ்ஸி 23 * விஜய் 19*கேல், விஜய்க்கு போட்ட முதல் பந்து 6. லாங் ஆன் பகுதியில் பந்து சென்று இறங்கியது. இந்த சிக்ஸர்கள் தவிர ஒரு மற்றும் இரண்டு ரன்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆறாவது ஓவர் முடிவில் ஸ்கோர் 56.
மேட்சின் முதல் 4 அடித்தவர் ஹஸ்ஸி. பவுலர் மிதுன்.

வெட்டோரி போட்ட பந்தை பறக்க விட்டார் விஜய். அது லாங் ஆன் பகுதியில் தாண்டி விழுந்து 6 ரன்கள் விஜய்க்கும், சி எஸ் கே அணிக்கும் கிடைத்தது.
10 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள். விஜய் அடித்தார். பவுலர் மிதுன்.
ஸ்கோர் 94 ரன்கள் ஹஸ்ஸி 39* விஜய் 49*

ஆர் சி பி பவுலர்கள் எவ்வளவு முயன்றும், இந்த இரு ஒப்பனிங் ஜோடியை பிரிக்க முடியவில்லை.இவர்கள் ரன்களை குவித்த விதம் கூடியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.11 வது ஓவரில் விஜய் அடித்த பந்தை பிடிக்க முடியாமல் நழுவ விட்டார் பவுலர். அது ஒரு கடினமான கேட்ச்.ஸ்கோர் 11 ஓவர்கள். 103 ரன்கள்ஹஸ்ஸி 45* விஜய் 52*

அரவிந் பந்தில் 6 அடித்தார் விஜய். அதே ஓவரின் கடைசி பந்தும் 6 அடிக்கப்பட்டது.
அடுத்த ஓவரில் சாஹீர் கான் பந்தில் விஜய் 4 அடித்தார். 1 மற்றும் 2 ரன்கள் வேறு வந்த வண்ணம் இருந்தன.14 ஆம் ஓவரில் வெட்டோரி பவுலிங்கில் இரண்டு 4 கள் வேறு சேர்ந்தன.

ஸ்கோர் 143 ரன்கள்.

ஹஸ்ஸி 56* விஜய் 80*

15 ஓவரில் இரண்டு 6 கள். ஹஸ்ஸி , விஜய் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். பவுலர் ஜே எஸ் மொஹமத்.இந்த ஓவரில் சி எஸ் கே டீம் முதல் விக்கெட்டை இழந்தது.

ஹஸ்ஸி அவுட் 63 ரன்கள். கேட்ச் பிடித்தது மிதுன்.
( 45 பந்துக்கள் 3 x 4 & 3 x 6)

15 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 161 / 1

தோனி 2* விஜய் 89*

ஸ்கோரை வேக படுத்த தோனி வந்துள்ளார் விளையாட.

17 வது ஓவர் முடிந்தது.
ஸ்கோர் 172 / 1

தோனி 7* விஜய் 95*

கேல் அடுத்த ஓவரை வீசினார். தோனி முதல் பந்தை ஸ்கோயர் லெக் பகுதியில் தூக்கி அடிக்க 6 ரன்கள்.
கடைசி பந்தையும் 6 பறக்க விட்டார் தோனி.
ஸ்கோர் 188 / 1

தோனி 22* விஜய் 95*

அடுத்த ஓவரை போட்டவர் அரவிந். விஜய் அடித்த பந்து கேட்சாக மாற வெட்டோரி பிடிக்க விஜய் அவுட்.
95 ( 52 பந்துக்கள். 4 x 4 & 6 x 6 )

அடுத்த பந்தில் தோனி அவுட். கோலி கேட்ச் பிடித்தார்
22 ( 13 பந்துக்கள். 2 x 6 )

ரெய்னா அதே ஓவரில் ஒரு 6 அடித்தார்.

ஸ்கோர் 19 வது ஓவர் முடிவில் 198 / 3

ஜே ஏ மோர்கெல் 2*
ரெய்னா 7*

கடைசி ஓவர். பவுலர்
கேல்.
நான்காவது பந்தில் மோர்கெல் அவுட். தூக்கி அடித்தார். கோலி அருமையாக கேட்ச் பிடித்தார்.
2 ( 4 பந்துக்கள்)

5 வது பந்திலும் விக்கெட் எடுத்தார் கேல்.
அவுட் ஆனவர் ரெய்னா.க்ளீன் போல்ட்.
8 ( 5 பந்துக்கள். 1 x 6 )

கடைசி பந்து. ஆட வந்த பிராவோ அடித்த பந்து, லாங் ஆன் பவுண்டரி கோட்டை தாண்டி சென்று விழுந்தது 6 ரன்கள்.

20 ஓவர்கள் முடிவில் சி எஸ் கே டீம் ஸ்கோர்
205 / 5

பிராவோ 6* பத்ரிநாத் 0*

ஆர் சி பி டீமில் விக்கெட் எடுத்தவர்கள்

அரவிந் 2 - 39
கேல் 2 - 34
மொஹமத் 1 - 39

ஆர் சி பி டீமில் சிறந்த பேட்ஸ்மன்கள் கேல், மயங்க் அகர்வா ல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் போன்றவர்கள் இருந்தனர்.

சி எஸ் கே டீமில் சிறந்த பவுலர்க்களான மோர்கெல், அஸ்வின், பிராவோ, போல்லிங்கர் இருந்தனர்.

மேலும் ஆர் சி பி டீமிற்கு எவ்வளவு ரன்கள் தேவை வெற்றி பெற என்பது பேட்டிங் ஆடும் முன்பே தெரிந்து இருந்தது கூடுதல் பலம்.

ஆட்டம் மறுபடியும் துவங்கியது. ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களின் எதிர் பார்ப்பும் அதிகிரித்தது.

தோனி ரவிச்சந்திரன் அஸ்வினிடம் , புது பந்தை கொடுத்து பவுலிங்கை துவக்க சொன்னார்.

விரு விருப்பு கூடியது.
ஆர் சி பி டீமின் சார்பில், அகர்வால், கேல் களம் இறங்கினர்.

அஸ்வின் முதல் பந்தை வீசினார். ஒரு ரன் எடுத்தார் அகரவால்.

அடுத்த இரண்டு பந்துக்கள் வீசப் பட்டன. ரன்கள் எடுக்கப் படவில்லை.

முதல் ஓவரின் நான்காவது பந்து. ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. ஆம். ஆர் சி பி டீம் தனது முதல் விக்கெட்டை அதுவும் முதல் ஓவரிலே யே பறி கொடுத்தது.
அஸ்வின் இந்த முறை சிறிது மாற்றி பந்து வீசினார். கேல் அடிக்க முயன்று கேட்ச் ஆக மாறி தோனி பிடித்தார். அஸ்வினுக்கு முதல் ஓவரிலேயே விக்கெட்.
அதிரடியாக ஆடுவார் என்று மிகவும் எதிர் பார்க்கப் பட்ட கேல் அமைதியாக பெவிலியன் திரும்பினார் , அவுட் ஆகி.
கேட்க வேண்டுமா கை தட்டல்கள், சப்தங்களுக்கு.

கேல் 0 ( 3 பந்துக்கள்)

ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் அகர்வால்.

முதல் ஓவர் முடி வில் ஸ்கோர் 6 / 1
அகர்வால் 5* கோலி 0*

இரண்டாவது ஓவர் போட்டது மோர்கெல்.

இந்த ஓவரில் 9 ரன்கள் எடுக்கப் பட்டன ஒரு பவுண்டரி உட்பட.

மூன்றாவது ஓவர் வீசப் பட்டது அஸ்வினால்.

மூன்றாவது பந்தில் அகர்வால் அவுட். அஸ்வின் வீசிய கேரம் பால், அகர்வாலை திக்கு முக்காட செய்தது.

மயங்க் அகர்வால் 10 ( 5 பந்துக்கள். 2 x 4 )

3 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 18 / 2

கோலி 6* ஏபி டி வில்லியர்ஸ் 1*

மோர்கெல் அடுத்த ஓவர் பவுலிங் செய்தார். 6 ரன்கள் எடுத்தனர்.

தோனி, போலிங்கரை பந்து வீச வைத்தார். இவருடைய இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறந்தன.
கோலி புல் முறையில் ஒரு பவுண்டரியும்,
டி வில்லியர்ஸ் ஒரு கவர் மற்றும் ஒரு பைன் லெக் பவுண்டரிகளை அடித்தார்.

5 ஆம் ஓவர் முடிவி ல் ஸ்கோர் 38 / 2
இந்த ஓவரில் மட்டும் எடுக்கப் பட்ட ரன்கள் 14.

கோலி 14* ஏபி டி வில்லியர்ஸ் 13*

சி எஸ் கே டீம் 5 ஆம் ஓவர் முடிவில் விக்கெட்டுக்கள் இழக்காமல் 48 ரன்கள் எடுத்து இருந்தனர்.

ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர், இந்த இரண்டு தலை சிறந்த வீரர்கள் நேர்த்தியாக பவுண்டரிகள் அடித்த விதங்களை பார்த்து.

அடுத்த ஓவர் போட்டது மோர்கெல். 9 ரன்கள் எடுத்தனர்.

ஜகாட்டி பந்து வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில், நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த ஏபி டி வில்லியர்ஸ் அவுட் LBW
18 ( 12 பந்துக்கள். 3 x 4 )

இந்த ஓவரில் எடுத்தது ரன்கள் 3. ஒரு விக்கெட்.

7 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 50 / 3

கோலி 20*
எல் ஏ போமேர்சபக் 1*

ஏபி டி வில்லியர்ஸ் எதிர் பாராமல் இவ்வளவு சீீக்கிரம் அவுட் ஆனது, ஆர் சி பி டீமிற்கு பின்னடைவை உண்டு செய்தது. அவருடைய விக்கெட்டை இழந்தது அதிர்ச்சி அளித்தது அவரது டீமிற்கு.

ஒரு வேளை அவரும், கோலியும்
சேர்ந்து இன்னும் பல ஓவர்கள் ஆடியிருந்தால் கட்டாயம் ஆர் சி பி டீமின் ஸ்கோர் நிச்சயம் அதிகரிக்க நல்ல வாய்ப்பு இருந்து இருக்கும்.

என்ன செய்வது எதிர் பாராத திருப்பங்களைக்
கொண்டது தானே கிரிக்கெட் ஆட்டம், அதுவும் குறிப்பாக T20
கேம்.

8 வது ஓவர் ரெயினா போட்டார். 10 ரன்கள் சென்றன.

அடுத்த ஓவரில், ஜகாட்டி மூன்றாவது பந்தில்
எல் ஏ போமேர்சபக் விக்கெட்டை அவரே கேட்ச் பிடித்து எடுத்தார்.
2 ( 3 பந்துக்கள்.)

9 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 67 / 4

கோலி 34* எஸ் எஸ் திவாரி 1*

ஒரு பக்கம் விக்கெடுக்களை இழந்து வரும் ஆர் சி பி டீமிற்கு வெற்றி பெற எடுக்க வேண்டிய ரன் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

களத்தில் உள்ள
பேட்ஸ்மன்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருவது மிக்க கவலை கொள்ள செய்ய வைத்தது.

பரபரப்பும், பொறுப்பும் அதிகரித்து வருகின்றது.

10 வது ஓவர் போட்டார் ரெய்னா. முதல் 5 பந்துக்களில் எடுத்தது இரண்டு 1 ரன் கள்.

இந்த ஓவரின்.கடைசி பந்தில் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.

ரெய்னா போட்ட ஆப் பிரேக் பந்தை லெக் சைட்டில் அடிக்க சென்ற விராட் கோலி தவற விட, அந்த பந்து நேராக அவர் காலில் பட்டு LBW முறையில் கோ லி அவுட்.

35 ( 32 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )

டீமின் நிலைமை அறிந்து விளையாடிக் கொண்டிருந்த கோ லி திடீரென்று இப்படி அவுட் ஆனது மொத்த டீமையும் அதிர வைத்து நிலை குலைய செய்தது.

10 வது ஓவர் முடிவில் ஆர் சி பி டீம் ஸ்கோர் 69 / 5

இதே சமயத்தில் சி எஸ் கே டீம் ஸ்கோர் 94 ஆக இருந்தது, விக்கெட்டுக்கள் ஏதும் இழக்காமல்.

இந்த சமயத்தில் அஸ்வின் மறுபடியும் பந்து வீச வந்தார்.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் வெட்டோரியின் விக்கெட்டை வீழ்த்தினார், அஸ்வின்.
அவரே கேட்ச் பிடித்தார்.

0 ( 1 பந்து )

இந்த ஓவரில் எடுத்த ரன்கள் 4

ஸ்கோர் 73 / 6
எஸ் எஸ் திவாரி 4*
மிதுன் 2*

12 வது ஓவர் ரெஹனாவால் போடப் பட்டது.

எடுக்கப் பட்ட ரன்கள் 15, மூன்று பவுண்டரிகள் உட்பட.

அடுத்த ஓவர் வீசியது பிராவோ. 4 ரன்கள் எடுத்தனர். ஆனால் கடைசி பந்தில் பிராவோ மிதுன் விக்கெட்டை எடுத்தார். கேட்ச் பிடித்தது போலிங்கர்.

11 ( 8 பந்துக்கள். 2 x 4 )

13 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 92 / 7.

அப்பொழுது ஆர் சி பி டீம் வெற்றி பெற மீதி உள்ள ஓவர்களில் ஒரு ஓவருக்கு எடுக்க வேண்டிய ரன்கள் 16 க்கும் அதிகம்.

14 வது ஓவரில் 3 ரன்கள் எடுக்கப் பட்டன.

அடுத்த ஓவர் பிராவோ வீசினார். முதல் 5 பந்துக்களில் இரு வீரர்களும் சேர்ந்து 6 ரன்கள் சேர்த்தனர்.
ஓவரின் ஆறாவது பந்தில் திவாரி சிக்ஸர் அடித்தார். லாங் ஆனில் போய் விழுந்தது, அந்த சிக்ஸர்.

ஆர் சி பி டீம் இந்த ஓவரில் 100 ரன்களை கடந்தது.

ஸ்கோர்107 / 7
எஸ் எஸ் திவாரி 23*
சாஹிர் கான் 3*

போலிங்கர் போட்டார் அடுத்த ஓவரை. 8 ரன்கள் எடுக்கப் பட்டன.
கான் ஒரு பவுண்டரி எடுத்தார்.

17 வது ஓவர் அஸ்வினால் போடப்பட்டது. 4 ரன்கள் எடுக்கப் பட்டன.
ஸ்கோர் 119 / 7

சி எஸ் கே வெற்றி பெற இன்னும் மூன்று ஓவர்களே வீச வேண்டி இருந்தது.

18 ஆம் ஓவரில் 8 ரன்கள்
19 ஆம் ஓவரில் 6 ரன்கள்
எடுக்கப் பட்டன.

போலிங்கர் வீசிய 19 வது ஓவரில், சாஹீர் கான் அடித்த பந்தை கவர் பகுதியில் கேட்ச் பிடித்தார் ஹஸ்ஸி.
21 ( 21 பந்துக்கள். 2 x 4 )

ஸ்கோர் 133 / 8

20 வது கடைசி ஓவர் போட்டவர் ரெய்னா. திவாரி இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.
அதில் கடைசி பந்தில் ஒரு சிக்ஸர்.

20 ஓவர்கள் முடிந்தன. ஆர் சி பி ஸ்கோர் 147 / 8

விக்கெட்டுக்களை எடுத்த சி எஸ் கே டீம் வீரர்கள்

அஸ்வின் 3 / 16
போலிங்கர் 1 / 28
ஜகாட்டி 2 / 21
ரெய்னா 1 / 39
பிராவோ 1 / 15


இந்த பைனல் மேட்சில் ஆரம்பம் முதலே சி எஸ் கே டீம் ஆக்கிரமித்து வந்தது.

முரளி விஜய் 5 ரன்களில் சதம் எடுக்க தவறினாலும் , அதிரடி ஆட்டத்தை வெளி படுத்தினார்.

அவருக்கு கம்பெனி கொடுத்த ஹஸ்ஸி சிறப்பாக ஆடினார்.

துவக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார் அருமையான பவுலிங்கால், அஸ்வின்.

ஆர் சி பி வீரர் கேலிடம் இருந்து வெகுவாக எதிர் பார்க்கப் பட்ட நிலையில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனது முதல் அதிர்ச்சி, டீமிற்கு.

கோலி, திவாரி, கானை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் அதிக படியான ரன்கள் சேர்க்கவில்லை. மேலும் நின்று விளையாடவும் இல்லை.
அடுத்து அடுத்து வீரர் கள் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய வண்ணம் இருந்த காட்சி எடுத்துக் காட்டியது , இந்த பைனலில் எந்த டீம் வெல்லும் என்று.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம், ராயல் சாலேன்ஜர்ச் பெங்களூர் டீமை, 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்ட நாயகர் விருது பெற்றார் சி எஸ்கே டீமின் வீரர் முரளி விஜய்.

சி எஸ் கே டீம் ஐ பி எல் கோப்பையை பெற்றது.


வாசுதேவன், பெங்களூரு

Story first published: Tuesday, March 12, 2024, 17:40 [IST]
Other articles published on Mar 12, 2024
English summary
IPL - Look at 2011 Final How CSK Beat RCB மறக்க முடியாத ஐபிஎல் போட்டி.. 2011ஆம் ஆண்டு பைனலில் ஆர்சிபியை சிஎஸ்கே வீழ்த்தியது எப்படி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+