Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் கேப்டன் பதவிக்கு ஒர்த்தே கிடையாது.. குழந்தைங்க கூட இப்படி தவறு செய்யாது..ஆரம்பமே பின்னடைவு

சென்னை : ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கேப்டனாக களமிறங்கியுள்ள கேஎல் ராகுல் ஒரு சின்னப்பிள்ளை தனமான காரியத்தை செய்துள்ளார். இது லக்னோ அணிக்கு பெரிதும் பின்னடைவை ஏற்படுத்தியது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகும். இங்கு பேட்ஸ்மேன்கள் அதிகமாக எல்பிடபிள்யூ ஆவது உண்டு. இதனால் நடுவர்கள் பல முறை தவறாக முடிவு வழங்க கூடும்.

IPL - LSG Captain KL Rahul silly mistake cost DRS chances vs CSK

இதனால் கேப்டனுக்கு டிஆர்எஸ் என்பது வரப்பிரசாதம் போன்றது. ஆனால், இம்முறை WIDE , நோ பால் எல்லாத்துக்கும் நடுவர்கள் தவறான முடிவை வழங்கினால் டிஆர்எஸ் முடிவை கேட்கலாம். ஆனால், நடுவர் செய்தது சரி தான் என்றால் அந்த டிஆர்எஸ் போய்விடும்.

இப்படி இருக்க, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆவேஷ் கான் ருத்துராஜ்க்கு பந்துவீசும் போது, அது WIDE ஆக சென்று பவுண்டரிக்கு சென்றது. இதனை அப்படியே விட்டு இருக்கலாம். ஆனால் இது பேட்ஸ்மேன்களின் காலில் பட்டு தான் சென்றது என ராகுல் டிஆர்எஸ் கேட்டார்.

இதனையடுத்து அது ரிப்ளேவில் ஒயிடு தான் என்று நிரூபணமானது. இதனால் லக்னோ அணி ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது. இதே போன்று ஆட்டத்தின் முதல் ஓவரை மெயர்ஸ் என்ற பார்ட் டைம் வீரரை வைத்து ராகுல் பந்துவீச சொன்னது, ராகுல் கேப்டன் பதவிக்கு ஒர்த்தே கிடையாது என்பதை காட்டுகிறது.

Story first published: Monday, April 3, 2023, 20:24 [IST]
Other articles published on Apr 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+