Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL MATCH RESULT - டெல்லியை வீழ்த்திய 2 தமிழக வீரர்கள்.. குஜராத் அணியின் தனித்துவ சாதனை

டெல்லி : ஐபிஎல் தொடரில் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 7 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாறியது.

இதனையடுத்து டேவிட் வார்னர் மற்றும் சர்பிராஸ் கான் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. பவர்பிளேவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பெரிய இலக்கு எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், அல்சாரி ஜோசப் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 IPL Match result - GT Beat DC by 6 wickets and gets 4 points

டேவிட் வார்னரை 37 ரன்களிலும், ரூசோவ் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று அபிஷேக் போரேல், சர்பிராஸ் கான் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்த போது, ரஷித் கான் தன்னுடைய வேலையை காட்டி சீரான இடைவெளியில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

சர்பிராஸ் கான் 30 ரன்களிலும், அபிஷேக் போரேல் 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி தடுமாறியது. இறுதியில் அக்சர் பட்டேல் மட்டும் 3 சிக்சர்களை விளாசி 36 ரன்களை சேர்க்க டெல்லி அணி 162 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சித்து.

எனினும் டெல்லி வீரர் ஆன்ரிச் நோக்கியா அபாரமாக பந்துவீசி, சாஹாவை 14 ரன்களிலும், சுப்மன் கில் 14 ரன்களிலும் வெளியேறினர். இதே போன்று கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் வெளியேற 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து குஜராத் அணி தடுமாறியது. அப்போது களத்தில் ஜோடி சேர்ந்த 2 தமிழக வீரரான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

 IPL Match result - GT Beat DC by 6 wickets and gets 4 points

பரபரப்பான கட்டத்திலும் கூலாக பார்ட்னர்ஷிப் அமைத்து அடிக்க வேண்டிய பந்துளை பவுண்டரிக்கு அடித்து இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 29 ரன்களில் வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய டேவிட் மில்லர் வழக்கம் போல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி வரை சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 48 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார்.

இதில் 2 சிக்சர்களம், 4 பவுண்டரிகளும் அடங்கும். கில்லர் மில்லர் 16 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 18.1 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குஜராத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 போட்டியில் சேஸிங் செய்த குஜராத் அணி 10 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.

Story first published: Tuesday, April 4, 2023, 23:52 [IST]
Other articles published on Apr 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+