Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசமாக விளையாடினோம்.. இது எல்லாம் சரியே கிடையாது.. SRH கேப்டன் ஏய்டன் மார்க்கரம் வேதனை

லக்னோ : ஐபிஎல் தொடரில் பதினாறாவது சீசனில் ஹைதராபாத் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. பேட்டிங் பந்து வீச்சு, பில்டிங் என மூன்றிலுமே ஹைதராபாத் வீரர்கள் தடுமாறினர். அந்த அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஏய்டன் மார்க்கரம் மற்றும் ஹாரி புருக் ஆகியோர் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் மார்க்கரம், நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களை அடிக்கவில்லை. 150 முதல் 160 ரன்கள் எடுக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் தொடர்ந்து நிறைய விக்கெட்களை நாங்கள் இழந்தோம்.

srh 2023

போட்டியில் எங்களுக்கு எந்த ஒரு உத்வேகமும் பேட்டிங்கில் அமையவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது தான் இங்கு பெரிய இலக்குகளை அடிக்க முடியாது என்று தெரிந்தது. லக்னோ ஆடுகளம் வரலாறும் அதைத்தான் சொல்கிறது. எனினும் நாங்கள் சண்டை போட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. லக்னோ வீரர்கள் கள சூழலுக்கு ஏற்ப பந்து வீசினார்கள்.

எங்களுடைய பந்துவீச்சாளர்களும் ஓரளவிற்கு நன்றாகவே பந்து வீசினார்கள். அவர்களுக்கு போதிய இலக்கை நாங்கள் கொடுக்கவில்லை. அடுத்த ஆட்டமும் வித்தியாசமான சூழலில் நடைபெறுகிறது. பஞ்சாப் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களை தோற்கடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ஏய்டன் மார்க்கரம் கூறியுள்ளார்.

முன்னணி வெற்றி குறித்து பேசிய கே எல் ராகுல் இரண்டு வாரங்களாக நாங்கள் இங்கு பயிற்சி செய்வதால் ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முன்பே ஓவர் கொடுத்தோம். இந்த ஆடுகளத்தை பார்த்த உடனே இங்கு அறிவுபூர்வமாக விளையாடினால் மட்டுமே நாங்கள் அடிக்க முடியும் என்று எனக்கு தெரிந்தது. களத்திற்கு ஏற்ப என்னுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கே எல் ராகுல் பாராட்டினார்.

Story first published: Friday, April 7, 2023, 23:51 [IST]
Other articles published on Apr 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+