Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொலைக்காட்சி உரிமையில் திருப்பம்..கோடிகளை இரைத்து ஸ்டார் புது டீல்..ஹாட் ஸ்டாருக்கு பின்னடைவு

மும்பை: அடுத்த 5 ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனமே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சோனி நிறுவனம் வாங்கியதாக வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் இணைய வாயிலாக நடைபெற்றது.

இதில் டிஸ்னி ஸ்டார், சோனி, ரிலையன்ஸ், ஜி, சூப்பர் ஸ்போர்ட், டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அமேசான் , கூகுள் மற்றும் யூ டியுப் நிறுவனங்கள் கடைசி நேரத்தில் வெளியேறிவிட்டன.

அது என்ன பேக்கஜ்?

அது என்ன பேக்கஜ்?

இம்முறை, ஐபிஎல் ஒளிபரபப்பு எரிமம் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. பேக்கஜ் ஏ பிரிவில் இந்தியாவின் தொலைக்காட்சி உரிமமும, கேக்கஜ் பி பிரிவில் இந்தியாவின் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமமும் ஏலம் மூலம் முதலில் நடந்தது. பேக்கஜ் சியில் சீசனின் தொடக்க போட்டியும், பிளே ஆப் போட்டிகளுக்கான ஏலமும், பேக்கஜ் டியில் உலக அளவிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலமும் நடைபெற்றது.

அடிப்படை விலை

அடிப்படை விலை

அதில் , ஒரு சீசனில் குறைந்தபட்சம் 74 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பேக்கஜ் ஏவில் ஒரு போட்டிக்கான ஆரம்ப ஏலம் விலை 48 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதே போன்று பேக்கஜ் பி பிரிவில் ஒரு போட்டிக்கான ஆரம்ப விலை 33 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இவ்விரு பிரிவுக்கான ஏலம் தற்போது முடிவடைந்துள்ளன.அதன் படி, பேக்கஜ் ஏக்கான ஏலத்தில் ஒரு போட்டிக்கான விலை 57 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை சென்றது. இது அடிப்படை விலையை விட 17 சதவீதம் அதிகமாகும். இதே போன்று பேக்கஜ் பி க்கான (டிஜிட்டல் உரிமை) ஒரு போட்டிக்கான விலை 50 கோடி வரை சென்றது. இதன் மூலம் இரண்டு பேக்கஜ் மூலம் தற்போது வரை ஒரு போட்டிக்கான விலை 107 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை சென்றுள்ளது.

ரூ. 44 ஆயிரம் கோடி

ரூ. 44 ஆயிரம் கோடி

இது முந்தைய ஐபிஎல் தொடரில் வெறும் 54 கோடி ரூபாய் எனற அளவில் இருந்தது. இதன் மூலம் இரு பேக்கஜையும் சேர்த்து 410 போட்டிகளுக்கு மொத்தமாக 44 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வரை ஏலம் சென்றுள்ளது, முதல் முறையாக ஐபிஎல் தொடரை டிவியில் வேறு நிறுவனமும், டிஜிட்டலில் வேறு நிறுவனமும் உரிமத்தை வாங்கியுள்ளனர். இதன் மூலம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற கால்பந்து தொடரை பின்னுக்கு தள்ளி உலக அளவில் NFL தொடருக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் 2வது இடத்தை பிடித்துள்ளது.

சோனி நிறுவனம் இல்லை

சோனி நிறுவனம் இல்லை

முதலில் வந்த தகவலின் படி, ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் சோனி நிறுவனமும், டிஜிட்டலில் வியாகாம் ரிலைன்ஸ் நிறுவனமும் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை ஸ்டார் நிறுவனம் தான் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பேக்கஜ் பியான டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளது. எனினும் இதுவரை பிசிசிஐ இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதே போன்று பேக்கஜ் சி க்கான முதல் நாள் மற்றும் பிளே ஆப் சுற்று போட்டிகளை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. இதே போன்று உலக அளவிலான உரிமத்தையும் வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளது.

Recommended Video

IPL Media Rights: TV-க்கு Rs 57.5 Crore! Digital-க்கு Rs 43,255 crore | Aanee's Appeal | *Cricket
ஹாட் ஸ்டாருக்கு பின்னடைவு

ஹாட் ஸ்டாருக்கு பின்னடைவு

இதே போன்று ஐபிஎல் போட்டிகள் இனி அடுத்த ஆண்டு முதல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வராது. அதற்கு பதிலாக வூட் என்ற செயலியிலும், ஜியோ டிவியிலும் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்ப படலாம். இந்தியாவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரை 4.3 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஐபிஎல் தொடர் இதில் ஒளிபரப்பு ஆகவில்லை என்றால், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்துவிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 13, 2022, 20:16 [IST]
Other articles published on Jun 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+