For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி ஒரு சீசனில் 94 போட்டிகள்... புதிய உச்சத்தை நோக்கி நகரும் ஐபிஎல்.. பிசிசிஐ தடாலடி முடிவு - காரணம்

மும்பை: ஐபிஎல் தொடரில் 94 போட்டிகளை நடத்துவதற்காக பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்த சூழலில் அடுத்த ஐபிஎல் தொடர்களுக்கான பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.

அதாவது இனி வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் வரவுள்ள மாற்றம் தெரியவந்துள்ளது.

ஒளிபரப்பு உரிமை

ஒளிபரப்பு உரிமை

ஐபிஎல் தொடரில் 2018 - 2022ம் ஆண்டு வரையிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை முடிவடைந்துவிட்டது. எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரபரப்பு உரிமைக்கான ஏலம் வரும் ஜூன் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார்ரூ.16,000 கோடி ஏலத்திற்கு சென்ற நிலையில், அடுத்த 5 ஆண்டுகளின் ஏலம் ரூ.65,000 கோடி வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட முடிவு

பிரமாண்ட முடிவு

இந்நிலையில் ஏலம் கேட்பவர்களின் கோரிக்களை ஏற்று, ஐபிஎல் போட்டிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு 74 போட்டிகள் நடைபெற்றது. அடுத்ததாக வரும் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளிலும் 74 போட்டிகளே நடைபெறும். ஆனால் 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் 84 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெகா ப்ளான்

மெகா ப்ளான்

இதன் பின்னர் 5வது ஆண்டான 2027ம் ஆண்டு புதிய உச்சமாக 94 போட்டிகளை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி நடந்தால் ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் தலா 2 முறை மோதிக்கொள்ளும். அதன்படி மொத்தமாக அடுத்த 5 ஆண்டுகளில் 410 போட்டிகளை நடத்துவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் போட்டி

நிறுவனங்கள் போட்டி

ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற உள்நாட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் வியாகாம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி, ஜீ நெட்வொர்க் போன்ற நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. உலகளவில் புகழ்பெற்ற அமேசான், கூகுள் நிறுவனங்களும் இந்த ரேஸில் கலந்துக்கொள்ளவுள்ளது.

Story first published: Thursday, June 9, 2022, 20:21 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
IPL Matches increased ( ஐபிஎல் போட்டி எண்ணிக்கைகள் அதிகரிப்பு ) ஐபிஎல் தொடரில் புதிய உச்சமாக ஒரு சீசனில் 94 போட்டிகளை நடத்துவதற்காக பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+