
ஒளிபரப்பு உரிமை
ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன. இதனால் 2023 - 2028ம் ஆண்டு வரையிலான உரிமைகளுக்கான ஏலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதன் மதிப்பு 3 மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என்ற கணிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை தொகை என்ன
ஐபிஎல் டிஜிட்டல் உரிமைக்கான அடிப்படை தொகையாக ஒரு போட்டிக்கு ரூ.33 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுக்கான உரிமை அப்படியே இரட்டிப்பாக ரூ.65 - 66 கோடி வரை ஏலம் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகான அடிப்படை தொகை ஒரு போட்டிக்கு ரூ. 49 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.65- 70 கோடி வரை ஏலம் போகும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரூ.60,000 கோடி
கடந்த 5 ஆண்டுகளுக்கான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இது தற்போது 3 மடங்கு அதிகரித்து ரூ.60,000 to ரூ.65,0000 கோடி வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனங்கள் போட்டி
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக இந்திய நிறுவனங்களான சோனி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ரிலையன்ஸ், ஜீ நெவொர்க், சன் குழுமம் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இதே போல சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களான அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளன.

ஏலம் தேதி மற்றும் விதிமுறை
இந்த ஏலமானது வரும் ஜூன் 12 தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த ஏலத்திற்கு முடிவு நாள் என்பதே கிடையாது. ஒவ்வொரு ஏலதாரருக்கும் 30 நிமிடங்கள் ஏலத்தொகையை கேட்பதற்காக நேரம் ஒதுக்கப்படும். எப்போது ஒரு அணிக்கூட அந்த 30 நிமிடங்களில் ஏலத்தொகையை அதிகரிக்காமல் உள்ளதோ, அப்போது யார் கடைசியாக அதிக தொகை கேட்டுள்ளனரோ அவர்களுக்கு உரிமை தரப்படும்.


Click it and Unblock the Notifications











