Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“3 திறமைகள் ஒரே வீரருக்குள்” மெகா ஏலத்தில் வரலாறு படைக்கும் இளம் வீரர்.. அடித்துக்கூறும் அஸ்வின்!

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் எதிர்பார்க்கப்படாத இளம் வீரர் ஒருவர் பல கோடிகளுக்கு ஏலம் போவார் என அஸ்வின் அடித்துக் கூறியுள்ளார்.

Recommended Video

அந்த 3 பேர் முக்கியம்.. பழைய வீரர்களுக்கு மீண்டும் குறிவைக்கும் CSK?

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகின்றன என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த முறை மொத்தம் 590 வீரர்கள் ஏலத்தில் விடப்படுகின்றனர். இதில் 370 இந்திய வீரர்களும், 220 அயல்நாட்டு வீரர்களும் உள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

மெகா ஏலத்தில் மொத்தமாக 48 வீரர்கள் தங்களை ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையின் கீழ் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலரும் அதிக தொகைக்கு செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அவர்களில் இருந்து யாரேனும் ஒருவர் இந்த முறை புதிய ரெக்கார்ட் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின் கணிப்பு

அஸ்வின் கணிப்பு

இந்நிலையில் அதனை இளம் வீரர் செய்வார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மெகா ஏலத்தில் இஷான் கிஷான் ஸ்பெஷல் தேர்வாக இருப்பார். அவர் 3 சிறப்பு விஷயங்களை ஒன்றடக்கிய வீரராக இருக்கிறார். அதாவது அவர் ஒரு விக்கெட் கிப்பர் பேட்ஸ்மேன், ஓப்பனிங் மற்றும் மிடில் என இரண்டிலுமே சிறப்பாக விளையாடுகிறார். இதனையெல்லாம் விட ஒரு இடது கை வீரராக அணிக்கு கிடைத்துவிடுகிறார் என அஸ்வின் கூறியுள்ளார்.

சேட்டை மன்னன்

சேட்டை மன்னன்

ஸ்டம்பிற்கு பின் நின்று பேட்ஸ்மேன்களை வம்பிழுத்து குழப்புவது கீப்பர்களுக்கு முக்கிய விஷயமாகும். அதில் ரிஷப் பண்ட் தான் சிறப்பானவர் என அனைவரும் நினைக்கிறோம். ஆனால் பண்ட்- ஐ விட இஷான் கிஷான் சேட்டை பிடித்தவர். என்னை பொறுத்தவரை அவர் ரூ.16 - 17 கோடி வரை ஏலம் போவார். ஆனால் அவருக்காக கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அர்த்தமுள்ளதாக அவர் மாற்றுவார் என அஸ்வின் நம்பிக்கையாக கூறியுள்ளார்.

குறிவைக்கும் மும்பை

குறிவைக்கும் மும்பை

கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். அவர் தற்போது சர்வதேச போட்டிகளிலும் கலக்கி வருகிறார். எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை அணி மீண்டும் இஷானுக்கு வலை விரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, February 9, 2022, 18:10 [IST]
Other articles published on Feb 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+