Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பேபி ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு' அடித்த லக்.. சிஎஸ்கே கடும் போராட்டம்.. இறுதியில் மும்பை தந்த ட்விஸ்ட்

பெங்களூரு: பேபி ஏ.பி டிவில்லியர்ஸுக்காக சிஎஸ்கே முட்டி மோதியபோதும் மும்பை அணி தட்டித்தூக்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று காலை ( பிப்.12) முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களை ஏலம் விட்டு வந்தனர்.

இந்நிலையில் மாலை நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிய வீரர்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டனர்.

குட்டி டிவில்லியர்ஸ்

குட்டி டிவில்லியர்ஸ்

அந்தவகையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த U19 வீரர் டேவல்ட் ப்ரேவிஸ் என்ற வீரரை வாங்க பல அணிகளும் போட்டிப்போட்டன. இதற்கு காரணம் இவர் அடுத்த ஏபிடிவில்லியர்ஸாக உருவெடுத்து வருவது தான். ஒவ்வொரு போட்டியிலும் அடிக்கும் ஷாட்கள் அப்படியே அச்சு அசலாக டிவில்லியர்ஸின் சாயலிலேயே உள்ளது. இதனால் அவரை " பேபி ஏபி டிவில்லியர்ஸ்" என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

U 19 உலகக்கோப்பை தொடரில் டேவல்ட் ப்ரேவிஸ் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் U 19 உலகக்கோப்பை தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ப்ரேவிஸ் தான் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் அடித்திருந்த 505 என்ற ஸ்கோரை இத்தனை வருடங்களாக யாராலும் நெருங்க முடியவில்லை. ஆனால் தற்போது ப்ரேவிஸ் 506 ரன்கள் குவித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

கடும் போட்டி

கடும் போட்டி

இப்படிபட்ட வீரரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டது. தோனிக்கு பிறகு நல்ல ஃபினிஷராக இருப்பார் என்பதால் அவரை ஏலம் எடுக்க ரூ.2 கோடி வரை போராடி பார்த்தது. ஆனால் பட்ஜெட் இடித்ததால் ரேஸில் இருந்து விலகியது.

கடைசி ட்விஸ்ட்

கடைசி ட்விஸ்ட்

இதனையடுத்து இருமுணை போட்டியாக ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இறுதியில் மும்பை அணி ரூ. 3 கோடிக்கு டேவல்ட் ப்ரேவிஸை ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தையும் நிரப்பியுள்ளது. டிவில்லியர்ஸின் தீவிர ரசிகனான ப்ரேவிஸ் இக்கட்டான சூழல்களை சமாளிப்பதிலும் சரி, திறமையிலும் சரி அவர் டிவில்லியர்ஸை போலவே தான். ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் அவர் ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 12, 2022, 20:01 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+