Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் பேசிய ஒரே ஒரு போன் கால்.. மெகா ஏலத்தில் மும்பை அணி ஆடிய நாடகம்.. டெல்லி அணிக்கு பெரிய ஆப்பு!

பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை அணியை குறிவைத்து நடந்த குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த பிப்.12 மற்றும் 13ம் தேதியன்று பெங்களூரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்காக 20 முதல் 25 வீரர்கள் வரை ஏலம் எடுத்துக்கொண்டன.

கலீல் அகமதின் ஏலம்

கலீல் அகமதின் ஏலம்

இந்நிலையில் இதில் குளறுபடி நடந்ததும், அதனை தெரிந்தும் தெரியாதது போன்று மும்பை அணி அமைதி காத்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது-ஐ ஏலம் எடுக்க மும்பை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதற்காக ரூ. 5 லட்சம் அடிப்படை தொகையில் இருந்து ரூ.5 கோடி வரை ஏலத்தொகை சென்றது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

கடைசியாக மும்பை அணி ரூ.5.25 கோடி ஏலம் கேட்ட சூழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்ந்து ஏலம் கேட்க யோசித்தது. அதன் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி தெரியாமல் பலகையை உயர்த்திவிட்டு, பின்னர் வேண்டாம் என கீழே இறக்கி பின்வாங்கினார். இதனால் மும்பை அணிக்கு தான் ரூ.5.25 கோடிக்கு கலீல் அகமது விற்கப்பட்டிருக்க வேண்டும்.

 என்ன குளறுபடி

என்ன குளறுபடி

ஆனால் டெல்லி அணி தான் கடைசியாக ரூ.5.25 கோடிக்கு ஏலம் கேட்டது என குழப்பிய ஏலத்தார் சாரு சர்மா, மும்பை அதிக தொகை கேட்கிறதா என கேட்டார். ஆனால் தாங்கள் முன்பு கேட்ட தொகையையே மறந்த மும்பை இந்தியன்ஸ் அணி தொகையை அதிகரிக்க மறுத்துவிட்டது. இதனால் மும்பை அணிக்கு ரூ.5.25 கோடிக்கு விற்கப்பட்டிருக்க வேண்டிய கலீல் அகமது, அதே தொகைக்கு டெல்லி அணிக்கு சென்றார்.

ரோகித்தின் உரையாடல்

ரோகித்தின் உரையாடல்

இந்நிலையில் மும்பை வேண்டுமென்றே தான், கவனிக்காதது போன்று இருந்துள்ளது எனக்கூறப்படுகிறது. ரூ.5.25 கோடி வரை தவறுதலாக கேட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த ஆகாஷ் அம்பானி, அவசர அவசரமாக ரோகித்திற்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார். அதில் கலீல் அகமதை அவ்வளவு தொகை கொடுத்து வாங்க வேண்டாம் எனக்கூற, உடனடியாக எதுவுமே தெரியாதது போன்று மும்பை அணி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Rohit Sharma Explains Why Shreyas Iyer Left Out Of Playing XI? | Oneindi Tamil
டெல்லி அணிக்கு ஆப்பு

டெல்லி அணிக்கு ஆப்பு

ஒவ்வொரு அணிக்கு தொகையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்து வந்த டெல்லி அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்திக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ரூ.2 கோடிக்குள்ளாக சென்றிருக்க வேண்டிய வீரரை தேவையின்றி தொகையை அதிகரித்து விட முயன்று இறுதியில் அதிகத்தொகைக்கு அவரே எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதுகுறித்த வீடியோக்களும் பரவி வருகின்றன.

Story first published: Wednesday, February 16, 2022, 17:20 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+