Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடப்பாவீங்களா..” மெகா ஏலத்தில் சங்ககாராவின் தவறான செயல்.. பெரும் இழப்பை சந்தித்த மும்பை அணி வீடியோ!

பெங்களூரு: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மெகா ஏலத்தில் சங்ககாரா செய்த தவறான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Recommended Video

“அடப்பாவீங்களா..” மெகா ஏலத்தில் சங்ககாராவின் தவறான செயல்.. பெரும் இழப்பை சந்தித்த மும்பை அணி வீடியோ!

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்தன. இதில் மும்பை அணியின் திட்டம் மட்டும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

மும்பையின் செயல்பாடு

மும்பையின் செயல்பாடு

தொடர்ந்து பேட்ஸ்மேன்களை மட்டுமே குறிவைத்த அந்த அணி பவுலர்களை மறந்தது. கடந்த சீசன்களில் மும்பை அணியின் பலம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் கூட்டணி தான். இந்த ஜோடியின் பவுலிங்கால் தான் எப்படிப்பட்ட ஸ்கோரையும் மும்பை அணியால் கட்டுப்படுத்த முடிந்தது. குறிப்பாக இந்த பவுலிங் ஜோடியிடம் சென்னை அணியே தோல்வியை சந்தித்துள்ளது.

மும்பை அணியின் தவறு

மும்பை அணியின் தவறு

ஆனால் அயல்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மீது துளிக்கூட ஆர்வம் காட்டாமல் இருந்தது மும்பை அணி. ட்ரெண்ட் போலட்-ஐ முதலில் இழந்த சூழலில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர் லுங்கி இங்கிடி, ஆஸ்திரேலிய வீரர் கோல்டர் நைல் ஆகியோர் அடிப்படை தொகைக்கே கிடைத்த போதும் கண்டுக்கொள்ளவில்லை.

திட்டம் கசிந்தது

திட்டம் கசிந்தது

இதனால் அவர்கள் அடுத்ததாக ஜோஃப்ரா ஆர்ச்சரை தான் குறிவைக்கப் போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஏனென்றால் அயல்நாட்டு வீரர்களில், பும்ராவுடன் ஜோடி அமைக்க சரியான தேர்வாக அவர் மட்டுமே இருந்தார். இதனால் மும்பை அணி எத்தனை கோடிகள் செலவானாலும் அவரை எடுக்க நினைத்தது.

சங்ககாரா செய்த விஷயம்

சங்ககாரா செய்த விஷயம்

இதனை அறிந்த ராஜஸ்தான் அணியின் உறுப்பினர் சங்ககாரா தவறான செயலில் ஈடுபட்டார். அதாவது ஆர்ச்சரை ஏலம் விட்ட போது, மும்பை அணிக்கு எதிராக இன்னும் கேளுங்கள், இன்னும் தொகையை அதிகப்படுத்துங்கள் என மற்ற அணிகளுக்கு கண்களாலேயே சைகை காட்டி வந்தார். மற்ற அணிகளும் அவர் கூறியதை போன்றே மும்பை அணியை கவிழ்க்க வேண்டுமென்றே தொகையை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தது.

இறுதியில் ஏற்பட்ட விளைவு

இறுதியில் ஏற்பட்ட விளைவு

இதன் விளைவாக ரூ.5.5 கோடி - ரூ. 6 கோடிக்கு ஏலம் போக வேண்டிய ஆர்ச்சரை இறுதியில் ரூ. 8 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்கும் இதே போன்று தான் பல வீரர்களின் தொகையை மற்ற அணிகள் தொகையை அதிகரித்தன. ஆனால் உஷாராக இருந்த சிஎஸ்கே ரூ. 5 கோடிக்கு மேல் தாண்டியவுடன் விலகிக்கொண்டதால் மற்ற அணிகளுக்கு ஆப்பாக அமைந்தது.

Story first published: Monday, February 14, 2022, 19:05 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+