ஐபிஎல் மெகா ஏலம்- 10 அணிகளும் ஏலத்தில் எவ்வளவு பணம் செய்யலாம்..? முழு விவரம்
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கு குறைவாகவே உள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். ஆனால் ஏலத்திற்கு முன்பே 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள பி.சி.சி.ஐ. வாய்ப்பு வழங்கியுள்ளது.
தக்க வைத்த வீரர்கள் போக, தற்போது எஞ்சியுள்ள பணத்தை வைத்து தான் அணிகள் ஏலத்தில் பங்கேற்க உள்ளன.

சிஎஸ்கே, மும்பை
இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைவசம் 48 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்களையும், 14 உள்ளூர் வீரர்களையும் எடுக்கலாம். 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கும் கைவசம் 48 கோடி ரூபாய் உள்ளது. இதில் 7 வெளிநாட்டு வீரர்களையும், 14 உள்ளூர் வீரர்களையும் தேர்வு செய்யலாம்.

புதிய அணிகள்
குஜராத் அணிக்கு கைவசம் 52 கோடி உள்ளது. இதில் 7 வெளிநாட்டு வீரர்களையும், 15 உள்ளூர் வீரர்களையும் எடுக்கலாம். லக்னோ அணி கைவசம் 59 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி இதில் 7 வெளிநாட்டு வீரர்களையும், 15 உள்ளூர் வீரர்களையும் எடுக்கலாம்.

கேகேஆர், டெல்லி, பஞ்சாப்
கொல்கத்தா அணி கைவசம் 48 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி 6 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம். டெல்லி அணி கைவசம் 47 கோடியே 50 லட்சம் ரூபாய் உள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணிக்கு 72 கோடி ரூபாய் கைவசம் உள்ளது. அந்த அணி 8 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.

ஆர்ஆர், ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச்
ராஜஸ்தான் அணியிடம் 62 கோடி ரூபாய் கைவசம் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்களையும், 14 உள்ளூர் வீரர்களையும் எடுக்கலாம், ஐதராபாத் அணி அதிகபட்சமாக 68 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்களையும், 14 உள்ளூர் வீரர்களையும் எடுக்கலாம். பெங்களூரு அணியிடம் கைவசம் 57 கோடி ரூபாய் உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications