Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்களை வாங்கிய மும்பை.. அமைதி காத்த ஆகாஷ் அம்பானி.. முதல் நாளில் பல்தான்ஸ் செயல்பாடு எப்படி?

ஜெட்டா: ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 4 சீசன்களில் ஒரு முறை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு மெகா ஏலத்தை சரியாக பயன்படுத்த முடிவு செய்து ஜெட்டா நகரில் பயிற்சியாளர் ஜெயவர்தனே உடன் ஆகாஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி களமிறங்கினர்.

இம்முறை பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை ரீடெய்ன் செய்ததால், ரூ.45 கோடி பர்ஸ் தொகையுடன் மெகா ஏலத்தில் பங்கேற்றது. மும்பை அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை விடவும் பவுலர்கள் தான் முதன்மை தேவையாக இருந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை அணி ஒரு வீரரை கூட வாங்காமல் காத்திருந்தது.

ipl auction 2025 ipl auction mumbai indians 2025


மிட்சல் ஸ்டார்க், ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சித்தாலும், கடைசி நிமிடத்தில் மும்பை அணி பின் வாங்கியது. இதனைத் தொடர்ந்து ட்ரென்ட் போல்ட் உச்சரிக்கப்பட்ட பின் நேரடியாக மும்பை அணி களமிறங்கியது. ராஜஸ்தான், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் போட்டிக்கு வந்த போதும் மும்பை ரூ.12.50 கோடியை கொடுக்க முன் வந்தது.

இதன் மூலம் பும்ராவிடன் இணைந்து பவுலிங் செய்ய மிகச்சிறந்த பார்ட்னரை மும்பை அணி கைப்பற்றியதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சீசனில் மும்பை அணிக்காக ஆடிய நமன் திர்-ஐ ரூ.5.25 கோடி கொடுத்து ஆர்டிஎம் மூலம் வாங்கியது. பின்னர் கடந்த சீசனில் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸை வாங்க சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் முயற்சித்தன.

ஆனால் குஜராத் அணி அவரை தட்டிச் சென்றது. தற்போது இந்த மெகா ஏலத்தில் ராபின் மின்ஸை ரூ.65 லட்சத்திற்கே மும்பை அணி வாங்கியது. தொடர்ந்து ஸ்பின்னர்களை வாங்க மும்பை அணி செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியாக கரண் சர்மாவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கே வாங்கியுள்ளது.

முதல் நாள் ஏலத்தின் முடிவில் மும்பை அணி வெறும் 4 வீரர்களை மட்டுமே வாங்கியுள்ள நிலையில், ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து 9 வீரர்கள் இருக்கின்றனர். ரூ.45 கோடியுடன் பங்கேற்ற மும்பை அணி முதல் நாளில் வெறும் ரூ.18.9 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளது. இதனால் 2வது நாளில் ரூ.26.1 கோடியுடன் எந்த வீரர்களை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மும்பை அணி விவரம்: ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கரண் சர்மா, ராபின் மின்ஸ், ட்ரென்ட் போல்ட், பும்ரா

Story first published: Sunday, November 24, 2024, 23:33 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+