Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Mumbai: 6வது கோப்பை லோடிங்.. கடப்பாரை அணியை கட்டமைத்த ஆகாஷ் அம்பானி.. மும்பை அணி வீரர்கள் விவரம்!

ஜெட்டா: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மும்பை அணி தரப்பில் ரூ.119.80 கோடி செலவிடப்பட்டு மொத்தமாக 23 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த மும்பை அணி, இந்த சீசனில் அணியை எப்படி கட்டமைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 5 இந்திய வீரர்களை தக்க வைத்து மும்பை அணி நிர்வாகம் அசரடித்தது. பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா என்று 5 கேப்டன்சி மெட்டீரியலை கைகளில் வைத்து தான் மும்பை அணி மெகா ஏலத்தில் கால் வைத்தது. முதல் நாளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமைதி காத்த நிலையில், முதல் வீரராக போல்ட்-ஐ வாங்கியது.

ipl auction 2025 ipl auction mumbai indians 2025

பின்னர் முதல் நாளில் அடக்கி வாசித்த மும்பை அணி கரண் சர்மா, ராபின் மின்ஸ், நமன் திர் உள்ளிட்டோரை வாங்கியது. இதையடுத்து 2வது நாள் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரியான் ரிக்கல்டன், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சஹர், ஆஃப்கான் ஸ்பின்னரான அல்லா கசன்ஃபர், ஆர்சிபி முன்னாள் அதிரடி வீரர் வில் ஜாக்ஸ் உள்ளிட்டோரை வாங்கியது.

இதன் மூலமாக மும்பை அணியின் பிளேயிங் லெவன் கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதன்பின் சில பேக் அப் வீரர்களையும், சில உள்ளூர் வீரர்களையும் மட்டுமே வாங்குவதில் கவனம் செலுத்தியது. அதன்படி அஸ்வனி குமார், மிட்சல் சான்ட்னர், டாப்லீ, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசார்ட் வில்லியம்ஸ் மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோரை வாங்கியுள்ளது.

டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, ரிக்கல்டன், நம்பர் 3ல் திலக் வர்மா, நம்பர் 4ல் சூர்யகுமார் யாதவ், நம்பர் 5ல் வில் ஜாக்ஸ், நம்பர் 6ல் ஹர்திக் பாண்டியா என்று பலமான பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் அமைந்துள்ளனர். இதன்பின் பவுலர்களில் தீபக் சஹர் மற்றும் போல்ட் இருவரும் பவர் பிளே ஓவர்களிலும், ஹர்திக் பாண்டியா மற்றும் அல்லா கசன்ஃபர் இருவரும் மிடில் ஓவர்களிலும் பயன்படுத்தப்படலாம்.

டெத் ஓவர்களில் வழக்கம் போல் பும்ராவுடன் ஒரு உள்ளூர் வீரரை பயன்படுத்த முடியும். இதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானங்களில் சான்ட்னரரை களமிறக்கக்கூடும். இதனால் மும்பை அணி கடப்பாரை அணியை கட்டமைத்து இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மும்பை அணி விவரம்: பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா, போல்ட், கரண் சர்மா, ராபின் மின்ஸ், நமன் திர், ரியான் ரிக்கல்டன், தீபக் சஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஸ்வனி குமார், மிட்சல் சான்ட்னர், டாப்லீ, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசார்ட் வில்லியம்ஸ், விக்னேஷ்

Story first published: Monday, November 25, 2024, 23:43 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+