For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப் அணியில் சிக்கல்.. IPL ஏலத்திலிருந்து விலகிய ப்ரீத்தி ஜிந்தா.. வாசிம் ஜாபர் ராஜினாமா..!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்துக்கு இன்னும் 24 மணி நேரத்திற்கே குறைவாக உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் மோதல் வெடித்துள்ளது.

பஞ்சாப் அணியில் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்கனவே மோதல் இருந்தது. அந்த அணியில் தொடர விரும்பவில்லை என்று கூறி கே.எல்.ராகுல், ஷாரூக்கான் ஆகியோர் விலகினர்.

இதனால் பஞ்சாப் அணி மாயங் அகர்வால் மற்றும் அர்ஷிதீப் சிங் மட்டுமே ஏலத்திற்கு முன் தக்க வைத்துள்ளது.

@ ரெய்னாவை வாங்கவுள்ள முன்னணி அணி.. அதுவும் ரூ. 8 கோடிக்கு.. ஆர்வம் காட்டாத தோனி! @

வாசிம் ஜாபர் விலகல்

வாசிம் ஜாபர் விலகல்

இந்த நிலையில், ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் பஞ்சாப் அணி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கருத்து வேறு பாடு காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்தார்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

இதே போன்று பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக ஏலத்திற்காக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் தற்போது தனிப்பட்ட காரணங்களால் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

ஒரே நாளில் 2 பேர் விலகியுள்ளது, பஞ்சாப் அணி ரசிகர்களிடையே அதிருப்தி அடைய செய்துள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில், அணில் கும்ப்ளே ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ப்ரீத்தி ஜிந்தா, வாசிம் ஜாபரின் ஆலோசனைகளை அனில் கும்ப்ளே புறம் தள்ளுவதாக கூறுப்படுகிறது.

அதிருப்தி

அதிருப்தி

இந்த நிலையில், ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்து ஏலத்தில் மோசமாக செயல்படுவதாகவும், அவரை ஏலத்தில் தலையிட வேண்டாம் என்றும் மற்ற உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிருப்தியில் உள்ள பிரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். பஞ்சாப் அணியின் தொடக்கமே இப்படி இருக்கிறதே என்று ரசிகர்களும் வேதனையில் உள்ளனர்.

Story first published: Friday, February 11, 2022, 17:29 [IST]
Other articles published on Feb 11, 2022
English summary
IPL Mega auction- Big Rift in Punjab Kings team as Preeti Zinta, Wasim jaffer leaves team பஞ்சாப் அணியில் சிக்கல்.. IPL ஏலத்திலிருந்து விலகிய ப்ரீத்தி ஜிந்தா.. வாசிம் ஜாபர் ராஜினாமா..!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+