Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - ரோகித் சர்மா திமிர் பேச்சு.. மற்ற அணிகளை வம்பிழுத்த ஹிட்மேன்..மைதானம் குறித்து ஏளனம் பேச்சு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் போட்டியில் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், மும்பை அணியும் மோதின.

Recommended Video

PBKS vs RCB: New RCB captain Faf duPlessis shines with the bat on debut | Oneindia Tamil

இந்தப் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய போது ரோகித் சர்மா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா என்ன பேசினார் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

பிசிசிஐயிடம் புகார்

பிசிசிஐயிடம் புகார்

அதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளை மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால் இந்த முடிவுக்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், மும்பை வான்கடே மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் சாதகமாக அமைந்துவிடும் என்று பிசிசிஐயிடம் புகார் அளித்தன.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இதனையடுத்து, அனைத்து அணிகளும் ஒவ்வொரு மைதானத்திலும் ஒரே அளவிலான போட்டிகளில் தான் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்து பேசிய ரோகித் சர்மா, முதலில் ஹோம் அட்வாண்டேஜில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சாதகம் இல்லை

சாதகம் இல்லை

நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. எங்கள் அணியின் உள்ள 90 சதவீதம் பேர் இதுவரை வான்கடே மைதானத்தில் விளையாடியது இல்லை. ஆனால் மற்ற அணிகள் தான் மும்பையில் விளையாடி இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் சாதகம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.

திமிர் பேச்சு

திமிர் பேச்சு

மும்பை அணிக்கு சாதகம் என்று பல்வேறு அணிகள் பிசிசிஐயிடம் புகார் அளித்தார்கள். அவர்களிடம் ஒன்றை கேட்க நான் விரும்புகிறேன். மும்பையில் மூன்று சர்வதேச மைதானங்கள் உள்ளது. உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் ஊர்களில் நீங்களும் பல மைதானங்கள் கட்டிக் கொள்ள வேண்டியது தானே என்று கூறினார். ரோகித் சர்மாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோகித்தின் இந்த பேச்சு குறித்து பிசிசிஐயிடம் மற்ற அணிகள் புகார் அளிக்க உள்ளனர்.

Story first published: Sunday, March 27, 2022, 18:13 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+