Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று மோதல்

Sachin and Vettori
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும், டேல்லி டேர்டெவில்ஸும் மோதவுள்ளன. 2வது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸும், டேணியல் வெட்டோரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன.

நான்கு அணிகளில் டெல்லியும், பெங்களூர் இந்த முறை புதிய கேப்டன்களுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளன. டெல்லிக்கு வீரேந்திர ஷேவாக் தலைமை தாங்குகிறார். அதேபோல பெங்களூர் அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் டேணியல் வெட்டோரி இருக்கிறார்.

2வது வெற்றி கிடைக்குமா வார்னேவுக்கு?

முதல் போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 2வது மோதலில் குதிக்கிறது. முதல் போட்டியில் இந்த அணி டெக்கான் சார்ஜர்ஸை அபாரமாக வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் அது சந்திக்கும் டெல்லி அணி, தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மலிங்காவின் வேகத்தில் சிக்கி தவித்து தோல்வியுற்ற டெல்லி அணி, தனது 2வது போட்டியில் வெல்லும் வேகத்துடன் உள்ளது.

இரு அணிகளிலும் சிறப்பான வீரர்கள் உள்ளனர். ராஜஸ்தான் அணியின் பலமாக வார்னேவின் கேப்டன்ஷிப் உள்ளது. ராய் டெய்லர், ஜோகன் போத்தா ஆகியோரையும் இந்த அணி வெகுவாக நம்பியுள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரை ஷேவாக், டேவிட் வார்னர் ஆகியோரின் பேட்டிங்கும், இர்பான் பதான், நமன் ஓஜா ஆகியோரும் பலமாக உள்ளனர்.

சச்சின் Vs வெட்டோரி

2வது போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டேணியல் வெட்டோரி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பையை வீழ்த்தும் ஆயத்தத்துடன் களத்தில் இறங்குகிறது.

இந்த அணியில் ஏப் டிவில்லியர்ஸ், திலகரத்னே தில்ஷன், ஜாகிர்கான் என ஜாம்பவான்கள் உள்ளனர். வெட்டோரியின் பந்து வீச்சு முக்கிய பலமாக இருக்கும்.

அதேசமயம், மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கிறார். அதேபோல, லசித் மலிங்காவின் அபாரமான பந்து வீச்சு மிகப் பெரிய பலமாக உள்ளது. பொளந்து கட்ட போலார்ட் தயாராக இருக்கிறார். வெட்டோரிக்கு சவால் விடும் வகையில் ஹர்பஜன் சிங் இருக்கிறார். ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் பிரமாதப்படுத்துவார்.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை சச்சின்-வெட்டோரி மோதல், மலிங்கா-திலகரத்னே மோதல்தான் சுவாரஸ்யமாக கவனிக்கப்படும்.

மொத்தத்தில் இந்த இரு போட்டிகளும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+