Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RR - 20 ரன்களில் 3 விக்கெட்டுகள் இழந்த மும்பை.. ரோகித், சூர்யகுமார் அவுட்.. ராஜஸ்தான் அபாரம்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் 3 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.மும்பை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஆறு புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறது.

IPL MI vs RR- Mumbai indians top 3 batsman got out for low score

மும்பை அணி இனி விளையாட போகும் 7 போட்டியில் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை மிரள வைத்திருக்கிறார்கள். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, பவுல்ட் பந்தை தூக்கி அடித்தபோது சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார்.

ரோகித் சர்மா 6 ரன்களில் வெளியேற இசான் கிஷன் டக் அவுட் ஆகி சந்திப் ஷர்மா பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார்.இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்து விளையாடியது.

இதில் சூரியகுமார் யாதவ் அபாரமாக அடித்து ரன்களை சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு தகுந்தார் போல் அவர் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார்.இந்த நிலையில் அவரும் சந்திப் சர்மா பந்தை தூக்கி அடித்தபோது கேட்ச் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று புள்ளி ஒரு ஓவர்கள் எல்லாம் 20 ரன்களை சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். சந்திப் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர். மும்பை இந்தியன்ஸ், சி எஸ் கே ,ஆர் சி பி போன்ற அணிகளின் முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சோபிக்க தவறி வருவது ஐபிஎல் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

Story first published: Monday, April 22, 2024, 20:14 [IST]
Other articles published on Apr 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+