8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
சென்னை: 2021 ஐபிஎல் ஏலம் சென்னையில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
2021 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி வரும் மே மாதம் நடக்க உள்ளது. கடந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில் இந்த தொடர் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் 2021 ஐபிஎல் தொடர் 8 அணிகளுடன் நடக்கும் கடைசி தொடர் ஆகும். அடுத்த வருடம் ஐபிஎல்லில் புதிய அணிகள் இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மினி ஏலம்
இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் சிறிய அளவில் நடக்கும் என்று கூறப்பட்டது. அதாவது 8 ஐபிஎல் அணிகள் மூலம் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மட்டும் இந்த ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். கூடுதலாக சில புதிய வீரர்கள் ஏலம் விடப்படலாம் என்று கூறப்பட்டது.

நிலைமை என்ன
முதலில் இந்த ஏலம் பிப்ரவரி 11ம் தேதி திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏலத்திற்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 18ம் தேதி இந்த ஏலம் நடக்கும். அப்போது சென்னையில் இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டு இருக்கும்.

எங்கு
பெரும்பாலும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில்தான் நடக்கும். ஆனால் இந்தமுறை ஐபிஎல் ஏலம் சென்னையில் நடக்க உள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏலம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள்
இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அணியில் இருந்து வாட்சன், ஹர்பஜன், ஜாதவ் போன்ற வீரர்கள் வெளியேறி உள்ளதால் புதிய வீரர்கள் பலர் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படலாம்.

சென்னை
சென்னையில் அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் அதே வாரத்தில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இதே சமயத்தில் ஐபிஎல் ஏலமும் நடக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications