For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் மினி ஏலம் - சிஎஸ்கேக்கு திரும்புகிறார் அஸ்வின்? ராஜஸ்தான் எடுத்த முடிவால் லக்.. முழு விவரம்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார்.

ஐபிஎல் ரிட்டன்ஷனுக்கான நேரம் இன்றுடன் முடிவடைகிறது. இதில் பல அணியினர், தங்களது நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளனர்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மினி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் அணிகள் பங்கேற்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி தமிழக வீரர் அஸ்வினை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வினின் செயல்பாடு

அஸ்வினின் செயல்பாடு

தமிழக வீரர் அஸ்வினை ஐபிஎல் மெகா ஏலத்தில் 5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி தக்க வைத்து கொண்டது. அஸ்வின் தனது பேட்டிங் திறமையை வளர்த்து கொண்டு முன்வரிசையில் களமிறங்கி அரைசதம் மற்றும் சாஹலுடன் கூட்டணி அமைத்து பந்துவீச்சிலும் கலக்கினார். பேட்டிங்கில் 191 ரன்களை குவித்த அஸ்வின், பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சென்னையில் ஐபிஎல்

சென்னையில் ஐபிஎல்

எனினும் அஸ்வினுக்கு 36 வயதாகி விட்டது. டி20 உலககோப்பையிலும் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாகவே 6 விக்கெட்டுகளை மட்டுமே அஸ்வின் கைப்பற்றினார். இதனால் அஸ்வினை விடுவிக்க, ராஜஸ்தான் அணி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது.

அஸ்வின் அனுபவம்

அஸ்வின் அனுபவம்

இதனால் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பினால், அவருடைய அனுபவம் நிச்சயம் கைக் கொடுக்கும். மேலும் பேட்டிங்கிலும் அஸ்வின் கலக்குவதால், சென்னை அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க முடிவு எடுக்கும். கடைசியாக அஸ்வின் சென்னை அணிக்காக 2015 ஆம் ஆண்டு விளையாடினார். இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் சென்னைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலமான சுழற்பந்துவீச்சு

பலமான சுழற்பந்துவீச்சு

சென்னை ஆடுகளம், தோய்வாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் செயல்படும். இதனால், சென்னை அணி தனது சுழற்பந்துவீச்சை பலப்படுத்த உள்ளது. ஏற்கனவே அணியில் மொயின் அலி, ஜடேஜா, மகீஷ் தீக்சணா இருப்பதால், அஸ்வினின் வருகை மேலும் பலத்தை அதிகரிக்கும். ஆனால், தோனிக்கும், அஸ்வினுக்கும் நல்ல உறவு சமீப காலமாக இல்லை. இதனால் கடந்த முறையே அஸ்வினை சென்னை அணி நிர்வாகம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 15, 2022, 12:44 [IST]
Other articles published on Nov 15, 2022
English summary
IPL Mini Auction – RR Might release R Ashwin and csk tries to Pick him
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+