
பொலார்டுக்கு மாற்று
இதனை வைத்து அவர்கள் அதிகபட்சமாக ஒன்பது வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் மூன்று வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணி அடுத்த பொலார்ட் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொலார்ட் தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

யாருக்கு குறி?
இதனால் இந்த மினி ஏலத்தில் பொலார்டுக்கு பதில் ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டரை மும்பை அணி குறி வைக்கலாம். பென் ஸ்டோக்ஸ், கேமரான் கிரீன் மற்றும் ஷாம் கரன் என மூன்று வீரர்களில் ஏதேனும் ஒருவருக்கு மும்பை அணி வலை விரிக்கும். இதேபோன்று மும்பை அணியிடம் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் இல்லை. இதனால் இந்த இடத்தில் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் அமித் மிஸ்ராவை மும்பை அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

மாற்று விக்கெட் கீப்பர்?
ஜொப்ரா ஆர்சர், புமாரா காயத்திலிருந்து இப்போதுதான் திரும்புகிறார்கள். இதனால் அவருக்கு மாற்று வீரராக ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இருக்க வேண்டும். இதனால் மும்பை அணி துஷ்மன் சமீரா அல்லது ரிச்சர்ட்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தலாம். மும்பை அணியில் தற்போது ஒரே ஒரு விக்கெட் கீப்பர் மட்டும்தான் இருக்கிறார். இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டால் மாற்றுவதற்கு வீரர்கள் இல்லை.

கூடுதல் வேகப்பந்வீச்சாளர்
இதனால் ஜெகதீசன், முகமது அசாருதீன் போன்ற இந்திய விக்கெட் கீப்பர்களுக்கு மும்பை அணி குறி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உனாட்கட்டை மும்பை அணி விடுவித்து இருக்கிறது. அவருக்கு பதிலாக ஒரு இளம் வேகப் பந்துவீச்சாளர் அணிக்கு தேவைப்படுகிறார். இதன் காரணமாக சிவம் மூவி அல்லது 23 வயதான வித்வாத் காவேரியப்பா ஆகியோரை மும்பை அணி ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சிக்கல்
ஜோப்ரா ஆர்ச்சர் காயத்திலிருந்து குணமடைந்து இருப்பது கூதல் பலமாக பார்க்கப்படுகிறது. மும்பை அணி கிரண் பொலார்ட்க்கு மாற்றுவதற்காக அதிக தொகை செலவிட்டால் ,கூடுதல் விக்கெட் கீப்பர் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர், சுழற் பந்துவீச்சாளர் ஆகியோரை எடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மும்பை அணி என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











