கோட்டை விட்ட மோயின் அலி.. CSK க்கு ஆரம்பமே அதிர்ச்சி.. கடைசியில் காப்பாற்றிய ருதுராஜ்
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று தென்னகத்தின் இரு முக்கிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற தோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
சென்னை ஆடுகளம், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் தோய்வு அடைவதால், 140 முதல் 150 ரன்கள் என்ற இலக்கை துரத்துவதே எளிதாக இருக்கும். இதனால் சிஎஸ்கே வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.

இந்த நிலையில் ஐதராபாத் அணியில் அபாயகரமான வீரர் என்றால் ஹாரி புருக் தான். அவரது விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே, ஐதராபாத் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாரி புருக், ஒரு பவுண்டரி அடித்தார்.
இதனையடுத்து தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரின் முதுல் பந்தில் அபிஷேக் சர்மா அடித்த பந்து Mid விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த மோயின் அலியிடம் சென்றது. இதனை மோயின் அலி பிடித்ததை பார்க்காமல் பாதி தூரம் வரை Non striker ல் நின்று கொண்டிருந்த புருக் ஓடினார்.

இதனால் மோயின் அலிக்கு ரன் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வீணடித்துவிட்டார். இது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனைத் தாடர்ந்து ஹாரி புருக் 2 பவுண்டரிகளை அடிக்க சிஎஸ்க ரசிகர்களுக்கு வயிறு கலங்கியது. எனினும் ஆகாஷ் சிங் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது, ருதுராஜ் அபார கேட்ச் ஆனார்.


Click it and Unblock the Notifications