For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தாய் செய்த தியாகம்.. தங்க செயினை விற்று விளையாட வைத்தார்.. ஐபிஎல் வீரர் துருவ் ஜூரலின் கதை

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல இளம் வீரர்களுக்கு வாழ்க்கையில் உச்சத்தை தொட ஏணியாக அமைந்திருக்கிறது. பெயர் தெரியாத பல வீரர்களும் ஒரே இரவில் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர் தான் 22 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல், ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய துருவ் ஜூரவ், சிறப்பான ஆட்டத்தை இம்முறை வெளிப்படுத்தி இருக்கிறார்.

IPL - Mother Huge sacrifice and father great advice to RR Star Dhruv Jurel

உத்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் வீட்டை விட்டு ஓடி விடலாம் என்றெல்லாம் யோசித்து இருக்கிறாரா? துருவ் ஜூரலின் தந்தை கார்கில் போரில் பணிபுரிந்தவர். தாய் குடும்ப தலைவி ஆக இருக்கிறார். துருவ் ஜுரலின் தந்தை வருமானம் இல்லாத காரணத்தினால் மகனை கிரிக்கெட்டில் சேர்க்க முடியாத நிலை இருந்தது.

இதனால் படித்து குடும்பத்தை காப்பாற்றும் படி அவர் கூறியிருக்கிறார். ஆனால் மகள் ஜூரலில் தமக்கு கிரிக்கெட் தான் முக்கியம். இல்லையென்றால் நான் வீட்டை விட்டு சென்று விடுவேன் என முடிவெடுத்து வந்திருக்கிறார். அப்போது துருவ் ஜுரலின் தாய் தான் தன்னுடைய தங்க செயினை விற்று துருவ் ஜூரலின் தேவையான கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.

தனது தாயின் இந்த தியாகத்தை உணர்ந்த துருவ், அதன் பிறகு கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதிரடியாக ஆடும் திறமையை வைத்து பெயர் வாங்கி இருக்கிறார். இதன் மூலம் அண்டர் 19 இந்திய ஏ அணியிலும் இடம் கிடைத்திருக்கிறது. எனினும் ஜெய்ஸ்வால், ரவிபிஸ்னாய் போல் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால் துருவ் ஜூரலின் சொந்தக்காரர்கள், "உன்னோடு விளையாடிய வீரர்கள் எல்லாம் இப்போது பெரிய ஆளாகி விட்டார்கள். நீ என்ன இன்னும் இப்படி இருக்கிறாய் என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இம்முறை தூரல் ஜுரலின் தந்தை தான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே. நீ இன்னும் உனது உழைப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். உன்னுடைய உழைப்பை மாற்றத்தைக் கொண்டு வா உனக்கான நேரம் வரும் வரை காத்திரு என்று அறிவுறுத்தி இருக்கிறார். துருவ் ஜூரலின் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆக்ராவிலிருந்து நோய்டாவுக்கு பயணம் செய்ய சிரமப்பட்டு இருக்கிறார். இதனால் அவருடைய கிரிக்கெட் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு துருவ் ஜூரலை கிரிக்கெட் மைதானம் அருகில் தங்கி பயிற்சி செய்ய தாய் ஏற்பாடு செய்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் ஏலத்தில் பங்கேற்று வெறும் கையோடு வந்த துருவ் ஜூரலுக்கு 2022 ஆம் ஆண்டு லக் அடித்தது. ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணி 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தாலும் அவருக்கு ஒரு போட்டியை கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் இம்முறை இம்பேக்ட் விதியின் தயவால் துருவ் ஜூரலுக்கு பேட்ஸ்மேன் ஆக ராஜஸ்தான் அணி களம் இறக்கியது.

இதில் துருவ் ஜூரல், ஆர் சி பி எதிராக 16 பந்துகளில் 34 ரன்கள் சிஎஸ்கே எதிராக 15 பந்தில் 34 ரன்கள் என அடித்து அசத்தியிருக்கிறார். துருவ் ஜூரலுக்கு ஆட்டத்தை மைதானத்தில் வந்து தாயும் தந்தையும் பார்த்திருக்கிறார்கள். அப்போது ஜூரலின் தந்தை தனது மனைவியிடம் உனது தங்கச் செயின் தான் இப்போது ஜொலிக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Story first published: Saturday, June 3, 2023, 23:40 [IST]
Other articles published on Jun 3, 2023
English summary
IPL - Mother Huge sacrifice and father great advice to RR Star Dhruv Jurel தாய் செய்த தியாகம்.. தங்க செயினை விற்று விளையாட வைத்தார்.. ஐபிஎல் வீரர் துருவ் ஜூரலின் கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+