Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - போட்டினா இது தான்.. கடைசி வரை திரில்லர்.. 41 வயதில் தோனி காட்டிய மரண பயம்.. அலறிய ராஜஸ்தான்

சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் 52 ரன்கள் எடுத்தார். அதேபோல் சென்னை அணி சார்பாக ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாட பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி 57 ரன்கள் சேர்த்தது.

IPL - MS Dhoni and Jadeja valiant effort went vain in RR Game

தேவ்தத் படிக்கல் 38 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். 33 பந்துகளில் பட்லர் அரைசதம் கடக்க, இறுதியில் ஷிம்ரன் ஹேட்மயர் , அஸ்வின் தலா 30 ரன்கள் கொடுக்க, , ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, இதனையடுத்து ரஹானே மற்றும் கான்வே ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரஹானே 19 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேற, அதன் பிறகு மோயின் அலி, சிவம் துபே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

கான்வே 50 ரன்களில் வெளியேற, சிஎஸ்கேவின் வெற்றி மிகவும் கடுமையானது. கடைசி 4 ஓவரில் 50 ரன்களுக்கு மேல் அடிக்க இருந்தது. அப்போது 18வது ஓவரில் சாம்பா வீசிய பந்தில் தோனி 35 மீட்டர் உயரத்தில் சிக்சர் அடிக்க சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது. அந்த ஓவரில் சிஎஸ்கே 14 ரன்கள் அடித்தது.

IPL - MS Dhoni and Jadeja valiant effort went vain in RR Game

இதனையடுத்து கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜடேஜா , ஹோல்டர் வீசிய ஓவரில் 2 சிக்சர் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து கடைசி 6 பந்தில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 2 பந்தும் ஓயிடாக மாற, தோனி, கடைசி ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தை சிக்சருக்கு விரட்டினார். கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட, சந்தீப் சர்மா யாக்கரை வீச, தோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோனி 17 பந்தில் 32 ரன்களும், ஜடேஜா 15 பந்தில் 25 ரன்களும் எடுத்தனர்.

Story first published: Wednesday, April 12, 2023, 23:36 [IST]
Other articles published on Apr 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+