சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் தலைவலியை கொடுக்கப் போவது ஜாஸ் பட்லர் தான். தொடக்க வீரராக களமிறங்கி சிக்சர்களை அடித்து மிரட்டுவார். சேப்பாக்கம் மைதான பவுண்டரி எல்லையை எல்லாம், அவர் அடிக்கும் பந்து எளிதாக தாண்டி விடும்.
இந்த நிலையில், ஜாஸ் பட்லரை சமாளித்தால் தான் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிடைக்கும். இதனால் பட்லரை சமாளிக்க தோனி, சில யுத்திகளை வகுத்துள்ளார். அது கைக் கொடுக்குமா என்பதை தான் தற்போது பார்க்க உள்ளோம்.

ஜாஸ் பட்லர் எப்போதுமே வேகப்பந்துவீச்சை அடித்து நொறுக்க கூடியவர். இதனால், பட்லரை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே சுழற்பந்துவீச்சை கொண்டு வர தோனி முடிவு எடுத்தார். இதனால் பவர்பிளேவில், 2 அல்லது 3 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்து சமாளிக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஜாஸ் பட்லர்,மிட்செல் சாண்ட்னர் ஓவர்களில் இதுவரை 24 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதே போன்று தீக்சனா ஓவரில் பட்லர் 25 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை தான் அடித்துள்ளார். இதே போன்று மோயின் அலி பந்துவீச்சில் 39 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆனால் மோயின் அலி ஓவரில் இதுவரை பட்லர் 3 முறை ஆட்டமிழந்து இருக்கிறார். இதனால் பட்லரை சமாளிக்க ஸ்பின் அட்டாக் என்ற யுத்தியை தோனி பையன்படுத்தலாம். இதனால் இன்றைய ஆட்டத்தில், தோனி அதிகப்பட்சமாக 4 ஸ்பின்னர்களை கூட பயன்படுத்தலாம். பட்லரை விரைவாக வீழ்த்திவிட்டாலே சிஎஸ்கேக்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.