Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரரை எங்களிடம் தாருங்கள்.. பதிலுக்கு இவரை வச்சிக்கோங்க.. மும்பை இந்தியன்ஸ் அணி கோரிக்கை

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் சஞ்சு சாம்சன் வருவாரா மாட்டாரா என்ற விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தால் சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே அணி கேட்டது.

அதற்கு பதில் சிவம்துபே அல்லது பதிராணா என இரண்டு வீரர்களை ராஜஸ்தான் அணி கேட்டிருந்தது.ஆனால் இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த தருணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது சிஎஸ்கே வீரர் ஒருவரை கேட்டிருப்பது ஐபிஎல் களத்தை சூடு பிடிக்க வைத்திருக்கிறது.

CSK vs MI

சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த கலீல் அகமதை தங்கள் அணிக்கு கொடுக்குமாறு மும்பை இந்தியன்ஸ் அணி கோரிக்கை விடுத்திருக்கிறது. கலீல் அகமது நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பவர்பிளேவில் சிறப்பாக பந்து வீசி கலீல் அஹமத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மும்பை அணி கலில் அகமதை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதில் தீபக்சாகரை சிஎஸ்கே அணிக்கு அனுப்புவதாக மும்பை அணி கூறியுள்ளது. தீபக்சாகர் பெரும்பான்மையான போட்டிகள் சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடி இருக்கிறார்.

எனினும் கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், 14 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் தீபக் சாகருக்கு 33 வயதாகிறது. கலீல் அகமதுக்கு 27 வயது தான் ஆகிறது. இந்த நிலையில் மும்பை அணி கலீல் அகமதை கேட்டிருப்பதால், சிஎஸ்கே அணி என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலீல் அகமதை வழங்கிவிட்டு தீபக் சாகரை பெற்றுக் கொள்ளுமா இல்லை கலில் அகமதையே வைத்து தொடரலாமா என்ற ஆலோசனையில் சிஎஸ்கே ஈடுபட்டு வருகிறது. தீபக்சாகர் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சிஎஸ்கே அணிக்கு பெரும்பகுதியின் போட்டிகளில் விளையாடாமல் காயத்தில் இருந்தார்.இதனால் தான் அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் தீபக் சாகரை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது தவறான ஒரு விஷயமாக இருக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, August 29, 2025, 14:18 [IST]
Other articles published on Aug 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+