For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடர் மறக்க முடியாத ஆட்டம்.. சிஎஸ்கே ரசிகர்கள் மனம் நொறுங்கிய நாள்..1 ரன்னால் பறிப்போன கோப்பை

மும்பை : 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். காரணம், சிஎஸ்கே ரசிகர்கள் இதயம் நொறுங்கிய நாள். ராஜிவ் காந்தி சர்வ தேச ஸ்டேடியம், ஹைதராபாத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் ஆட துவங்கியது.
கேப்டன் ரோஹித் ஷர்மா, குய்ங்டோன் டி காக் இருவரும் வலுவான துவக்கம் கொடுத்தனர்.45 ரன்கள், அணி அடைந்த பொழுது டி காக் அவுட். தாகுர் வீசிய பந்தில், கேட்ச் பிடித்தது தோனி.

IPL - Mumbai indians beat CSK by 1 run in 2019 Final

29 ( 17 பந்துக்கள். 4 X 6 )

முதல் 5 ஓவர்கள் ரன்கள் / ஸ்கோர்
2 / 2 , 8 / 10 , 20 / 30 , 7 / 37 , 8 / 45

முதல் 6 அடித்தது ரோஹித் ஷர்மா . பவுலர் தாகுர். இரண்டாவது ஓவர். டீப் ஸ்கோயர் லெக் பகுதி.

மூன்றாவது ஓவர் ரசிகர்கர்களை சிக்ஸர்கள் மழையில் மகிழ வைத்தது. பவுலர் சஹர். அடித்தவர் டி காக். மூன்று அட்டகாச சிக்ஸர்கள். ஸ்கோர் குதித்துக் கொண்டு முன்னேறியது. முதல் பந்து மிட் விக்கெட் பகுதியில் ரசிகர்கள் நடுவில் இருந்து பந்து மீட்கப் பட்டது. மூன்றாவது பந்து எக்ஸ்ட்ரா கவர் பகுதிக்கு அடிக்க சிக்சராக உருவெடுத்து பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்று விழுந்தது. ரசிகர்களின் ஆரவாரம்.

ஐந்தாவது பந்தை துல்லியமாக ஆட 6 மிட் ஆப் திக்கில்.ஐந்தாவது ஓவரில் ஒரு 6. அடித்தது டி காக். தாகுர் பந்து போட்டவர்.10 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 70 / 2
இஷான் கிஷன் 15, எஸ் ஏ யாதவ் 8

இந்த 5 ஓவர்களின்
ரன்கள் / ஸ்கோர்

ஓவர் 6 - 0 / 45 - 2

ஓவர் 7 - 5 / 50 - 2

ஓவர் 8 - 3 / 53 - 2

ஓவர் 9 - 5 / 58 - 2

ஓவர் 10 - 12 / 70 - 2

இந்த 5 ஓவர்களில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அடித்தது இரண்டே இரண்டு பவுண்டரிகள். 10 வது ஓவர் வீசயவர் பிராவோ. அடித்தது இஷான் கிஷன்.
ஒரு மற்றும் இரண்டு ரன்கள் வந்தன. ஆனால் எதிர் பார்க்கப்பட்ட ரன்கள் கூடவில்லை.
இந்த முதல் 10 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது இரண்டு விக்கெடுக்களை.
டி காக் விக்கெட்டிற்கு அடுத்து, சஹர் போட்ட பந்தில் தாவி பிடித்தார் தோனி கேட்சை, ரோஹித் ஷர்மா அவுட். 15 ( 14 பந்துக்கள். டி 1 x 4. & 1 x 6 )

15 வது ஓவருக்குள் மூன்று விக்கெடுக்கள் விழுந்தன. ஸ்கோர் 102 / 5 இந்த தருணத்ததில் சி எஸ் கே அணியின் கைகள் ஓங்கி இருந்தன. மும்பை இம்தியன்ஸ் அணி, மிகுந்த அழுத்தத்தில் இருந்தனர்.11 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட். இம்ரான் தாஹிர் பந்தில் போல்ட் ஆனார். 15 ( 17 பந்துக்கள். 1 x4 )

13 வது ஓவரில் தாகுர் பந்தில், அவுட் ஆனது கிருனால். பந்து உயர மாக செல்ல சுமார் 20 கஜ தூரம் ஓடி தாகுர் மிகவும் அருமையான கேச்சை பிடித்தார். முதல் முயற்சியில் கைகள் நழுவி கீழே விழும் தருணத்தில் , இரண்டாவது முயற்சியில் பிடிக்க ஸ்டேடியமே அதிர்ந்தது.
7 ( 7 பந்துக்கள் )

15 வது ஓவரில் ஒரு 6 பறந்தது. தாஹிர் பவுலிங்கில் எடுத்தவர் பொல்லார்ட். நேராக சிக்ஸர் அடித்து அதிர வைத்தார் , பேட்ஸ்மன்.

ஓவரின் 4 வது பந்தில் இஷான் அவுட். கேட்ச் பிடித்தது ரெய்னா.
23 ( 26 பந்துக்கள். 3 x 4 )

11 வது ஓவர் / 10 / 80 - 2

12 வது ஓவர் / 5 / 85 - 3

13 வது ஓவர் / 5 / 90 - 4

14 வது ஓவர் / 4 / 94 - 4

15 வது ஓவர் / 8 / 102 - 5

கடைசி 5 ஓவர்கள் 47 ரன்கள் அதிகரிக்க உதவின.

மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று விக்கெடுக்களை இழந்தன.

ரன்கள் / ஸ்கோர்

8 / 110 - 5
10 / 120 - 5
16 / 136 - 5
4 / 140 - 7
9 / 149 - 8

இந்த 5 ஓவர்களில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடிக்கப் பட்டன. 8 டாட் பந்துக்கள்.

பொல்லார்ட் 2 சிக்ஸர், ஹர்திக் பாண்ட்யா 1.

அவுட்.ஆனவர்கள் .

ஹர்திக் (16 ) ராகுல் சஹர் (0 ) மக்ளிகாம் 0

பொல்லார்ட் 41* பும்ரா 0*

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 / 8

விக்கெட் வீழ்த்திய
சி எஸ் கே வீரர்கள்
தீபக் சஹர் 3 - 26
தாகுர் 2 - 37
தாஹிர் 2 - 23

கூடுதலாக 40 - 45 ரன்கள் எடுத்து இருந்து இருக்கலாம் , மும்பை இந்தியன்ஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துவக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதல் நான்கு ஓவர்களுக்குள் 30 ரன்களை தாண்டி விட்டது சி எஸ் கே அணி.
பேப் டு ப்ளேசிச் அவுட். ஸ்டம்பிங்ஹ் செய்தது டி காக், பாண்ட்யா பந்தில்.
26 ( 13 பந்துக்கள். 3 x 3 & 1 x 6 )

33 - 1

முதல் 7 ஓவர்களில் சி எஸ் கே அணி ஸ்கோர்
57 - 1

மொத்தம் 6 x 4 , 1 x 5 & 2 x 6

ஒரு விக்கெட்.

வாட்சன், டு ப்ளேசிச் தலா 3 பவுண்டரிகள் எடுத்தனர்.

வாட்சன், டு ப்ளேசிச் தலா ஒரு 6 அடித்தனர்., சிறந்த வீரர்கள் என்ற தெம்பில் சி எஸ் கே அணி முழு நம்பிக்கையோடு ஆட்டத்தை தொடர்ந்தனர்.அந்த 5 ரன்கள் மலிங்கா ஓவரில் கிடைத்தது.அடுத்த 9 ஓவர்களில் 51 ரன்கள் சேர்ந்தன. ஸ்கோர் 108 - 4

அவுட் ஆனவர்கள்
ரெய்னா. பவுலர் சஹர் LBW. 8 ( 14 பந்துக்கள்.)

ராயுடு. பும்ரா பவுலர். கேட்ச் பிடித்தது டி காக்.
1 ( 4 பந்துக்கள் )

தோனி. ரன் அவுட் 2 ( 8 பந்துக்கள் )

ஸ்கோர் 82 - 4 ( 13 வது ஓவர் முடிவில் )

தோனி எட்டு பந்துக்கள் ஆடியும், 2 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களை அதிர செய்தது. இவ்வளவு சாதாரணமான ஆட்டங்களை தோனி, ரெய்னா இருவரிடம்.இருந்தும் ரசிகர்கள் எதிர் பார்க்கவே இல்லை.ரசிகர்கள் பெரும் வருத்ததில் ஆழ்ந்தனர்.
வெற்றி பெறுவதற்கு தேவையான ரன்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்ல, கைவசம் ஆட வேண்டிய ஓவர்கள் எண்ணிக்கை விரைவாக குறைந்துக் கொண்டே வந்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் அதிகரித்தது.
23 டாட் பந்துக்கள். 5 x 4 & 1 x 6 அந்த ஒரு சிக்சரை பிராவோ, மலிங்கா பந்தில் அடித்தார்.

19 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 141 - 5.
ஜடேஜா 4
வாட்சன் 76

கிருனால் வீசிய 18 வது ஓவரில் வாட்சன் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்து நொறுக்கினார்.

அது மட்டும் இல்லாது
சி எஸ் கே வெற்றி அடையும் என்ற நம்பிக்கையை அளித்தார் , அவரது அதிரடி ஆட்டத்தால்.
முதல் 6 எக்ஸ்ட்ரா கவர் பகுதிக்கு சென்றது.
அடுத்த 6 நேராக சென்று விழுந்தது.
கடைசி 6 டீப் மிட் விக்கெட் பகுதிக்கு சென்றது.

19 வது ஓவரில் பும்ரா போட்ட பந்தில் பிராவோ அவுட். கேட்ச் பிடித்தது டி காக். 15 ( 15 பந்துக்கள். 1 x 6 )

கடைசி 20 வது ஓவர் வீசியவர் மலிங்கா. முதல் மூன்று பந்துக்களில் கிடைத்த ரன்கள் 4.
4 வது பந்தில் வாட்சன் ரன் அவுட்.
80 ( 59 பந்துக்களில். 8 x 4. & 4 x 6 )

கடைசி இரண்டு
பந்துக்களில் சி எஸ் கே அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவை.

எதிர் பார்ப்புக்கள் எகிறின. எங்கும் டென்ஷன்.

T 20 கிரிக்கெட்டின் தனி தன்மை உணர பட்டது.

ஆரவாரம், சப்தங்களுக்கு இடையே மலிங்கா ஓவரின் 5 வது பந்தை போட்டார். தாகுர்
எடுத்தது 2 ரன்கள்.

கடைசி பந்து யார்க்கர் வீசப் பட்டது.

மேட்ச் முடிந்தது. வெற்றி பெற்ற அணி அட்டகாசமாக கொண்டாடியது.

விக்கெட் எடுத்த வீரர்கள்.
கிருனால்
பாண்ட்யா 1 - 39
மலிங்கா 1 - 49
பும்ரா 2 - 14
சஹர் 1 - 14

ஆட்ட நாயகர் விருது பெற்றவர் பும்ரா.மலிங்காவின் கடைசி ஓவர் கடைசி பந்தில்
தாகுர் எதிர் கொள்ள முடியாமல் அவுட் ஆனார்.மும்பை இந்தியன்ஸ் அணி இந்த த்ரிலிங்கான மேட்சை 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ பி எல் கோப்பை பெற்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, March 17, 2024, 21:30 [IST]
Other articles published on Mar 17, 2024
English summary
IPL - Mumbai indians beat CSK by 1 run in 2019 Final ஐபிஎல் தொடர் மறக்க முடியாத ஆட்டம்.. சிஎஸ்கே ரசிகர்கள் மனம் நொறுங்கிய நாள்..1 ரன்னால் பறிப்போன கோப்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+