Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் விதிகளில் மாற்றம்? அனைத்து அணிகளும் போராடும்.. முன்னாள் வீரர் யோசனை

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதுமே ஐபிஎல் தொடரில் புதிய புதிய விதிகளுக்கு பிசிசிஐ அனுமதி அளிக்கும் அந்த வகையில் ஐபிஎல் தொடரை மேலும் சவால்கள் நிறைந்த தொடராக மாற்றுவதற்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஆனால் ஆகாஷ் சோப்ரா கூடுதல் புள்ளிகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இது குறித்து பேசிய அவர், போனஸ் புள்ளிகளை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது எல்லாம் நெட் ரன் ரேட் தான் முக்கியமாக ஐபிஎல் தொடரில் பார்க்கப்படுகிறது.

IPL New Rules

இதுவே போனஸ் புள்ளிகளை அறிமுகப்படுத்தினால் ஐபிஎல் தொடரில் போட்டிகள் மேலும் அதிகமாகும்.அதாவது, எதிரணியை விட 20 சதவீதம் சிறப்பாக நீங்கள் விளையாடினால் உங்களுக்கு போனஸ் புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் எடுத்துக்காட்டாக நீங்கள் 200 ரன்கள் அடித்து எதிரணியை 160 ரன்கள் சுருட்டினால் போனஸ் புள்ளிகளை வழங்க வேண்டும்.

இதேபோன்று எதிர் அணி அடிக்கும் 200 ரன்களை, நீங்கள் 16வது ஓவரிலே எட்டினால் உங்களுக்கு போனஸ் புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் சில அணிகள் ஒற்றைப்படை புள்ளிகளை பெறும். இதன் மூலம் இறுதி கட்டத்தில் தொடர் விறுவிறுப்பாக மாறும் என்று கூறியுள்ளார். இதேபோன்று காயம் அடைந்த வீரர்களுக்கு அதே போல் ஒரு மாற்று வீரரை விளையாட அனுமதிக்கும் முறையை ஐபிஎல் தொடரில் அனுமதிக்க வேண்டும்.

ஒரு வீரர் தொடர்ந்து எட்டு போட்டிகளில் விளையாட வில்லை என்றால் அவரை தொடருக்கு நடுவே வேறு அணிக்கு மாற்றிக் கொள்ளும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விதி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் யாரும் அதை பயன்படுத்துவதில்லை. அதுமட்டுமில்லாமல் லெஃப்ட் சைடு ஓயிடு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். லெக் ஸ்டம்புக்கு வெளியே லேசாக பந்து சென்றாலும் அதற்கு கூடுதல் ரன்கள் வழங்கப்படுகிறது.

ஆப்சைடுக்கு எவ்வளவு தூரம் பந்து விலகி சென்றால் அறிவிக்கப்படுகிறதோ, அதைப்போல் லெஃப்ட் சைடுக்கும் தூரத்தை நிர்ணயிக்க வேண்டும். இதன் மூலம் பந்து வீசும் அணிக்கு கூடுதல் சாதகத்தை நம்மால் உருவாக்க முடியும். இதேபோன்று பிக் பாஸ் லீக் தொடரில் பவர் பிளே இரண்டு முறை வழங்கப்படும். முதலில் 4 ஓவரும், பின் இரண்டு ஓவரும் பவர் பிளேவை எடுத்துக் கொள்ளலாம். அதை போல் ஒரு முறையை ஐபிஎல் தொடரிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 31, 2025, 13:33 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+