IPL 2024 - ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் யார்?
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படும். அந்த வகையில் இதுவரை 16 சீசன்கள் ஐபிஎல் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒவ்வொரு சீசனிலும் யார் ஆரஞ்சு நிற தொப்பையை வென்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இதேபோன்று 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் சச்சின் டெண்டுல்கரும் 2011 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியின் கெயிலும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்கள். 2012 ஆம் ஆண்டு மீண்டும் கெயில் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்ற, 2013 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் மைக்கில் ஹசி ஆரஞ்ச் நிற தொப்பியை வென்றார்.
2014 ஆம் ஆண்டு உத்தப்பாவும் 2015 ஆம் ஆண்டு டேவிட் வார்னரும், ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றினார்கள். 2016 ஆம் ஆண்டு விராட் கோலி முதன்முறையாக ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றினார். 2017 ஆம் ஆண்டு மீண்டும் டேவிட் வானர் ஆரஞ்சு நிற தொப்பியை தன தாக்கினார்.
2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வில்லியம்சன் ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார்.2019 ஆம் ஆண்டு டேவிட் வார்னரும், 2020 ஆம் ஆண்டு கேஎல் ராகுலும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்கள். 2021 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்வாடும், 2022 ஆம் ஆண்டு ஜாஸ் பட்லரும், 2023 ஆம் ஆண்டு கில்லும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் நடப்பு சீசனில் 2024 ஆம் ஆண்டு ஆரஞ்சு நிற தொப்பியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த 16 சீசன் முடிவில் ஒரு முறை கூட ரோகித் சர்மா ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கியதில்லை. இதனால் இம்முறை அவர் முதல் முறையாக வாங்குவாரா இல்லை விராட் கோலிக்கு அது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.