Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2019 playoffs: ஹிட் மேன் ரோகித்தா…? தல தோனியா…? ப்ளே ஆப் சுற்றுகள் இன்று தொடக்கம்

Recommended Video

IPL 2019 playoffs: Chennai vs Mumbai | ப்ளே ஆப் சுற்றுகள் இன்று தொடக்கம்- வீடியோ

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் முதல் குவாலிபையா் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

12-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Ipl play off starts today and mumbai indians sets up csk meeting

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி கேப்பிட்ல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வெற்றிப்பெறும் அணியுடன் மோத வேண்டும்.

அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு முன்னேறும். இதனால் தான் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இந்த சீசனில் 7 வெற்றிகளை குவித்துள்ளது.

அதேநேரம் மும்பை அணிக்கு எதிராக நடந்த 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருக்கிறது. அதிலும் ஒரு போட்டியில், சொந்த மண்ணில் தோற்றிருக்கிறது. அதனால் சென்னை அணி தான் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முழுபலத்தோடு களமிறங்கி வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், டுபிளசி, சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், தீபக் சகார்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கெய்ரான் போலார்டு, குர்னால் பாண்டியா, ராகுல் சகார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா, மிட்சல் மெக்லேனகன்.

Story first published: Tuesday, May 7, 2019, 10:55 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+