Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs GT -சென்னை ஆடுகளம் எப்படி இருக்கும்? டாஸ் வென்றால் என்ன செய்யனும்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வியை தரும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் சென்னை ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

IPL Play offs 2023 - CSK vs GT - who is having advantage - Pitch report

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் நடைபெற்ற 7 போட்டிகளில் சென்னை அணி நான்கு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது. சென்னை ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால், பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். வழக்கம்போல் சுழற் பந்துவீச்சாளர்கள் கையே இங்கு ஓங்கி இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை விட குஜராத்துக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம் குஜராத் அணியின் தலைசிறந்த இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், நூர் அகமது ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களை சமாளிப்பது சென்னை அணியினருக்கு கடும் சவாலாக இருக்கும்.

டாஸ் வென்றால் சேசிங் செய்வது சிறப்பாக இருக்கும். இதுவரை ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி மூன்று முறை மட்டும் தான் சேசிங் செய்து தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் இந்த ஆட்டத்தில் குஜராத்தை சேசிங் செய்ய விடுவது சென்னைக்கு பாதகமாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது நல்ல முடிவாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் எந்த அணி சுழற் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டு தைரியமாக ரன்களை சேர்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். குஜராத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் பெங்களூருக்கு எதிராக தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றனர். எனினும் அந்த போட்டி முடிவதற்கு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் நேற்று மாலை தான் சென்னையில் வந்திருப்பார்கள்.

ஓய்வின்றி குஜராத் அணி இருப்பது, அவர்களுக்கு மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற தைரியத்தில் இரு அணி வீரர்கள் உள்ளனர். குஜராத்துக்கு எதிராக இதுவரை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 23, 2023, 16:18 [IST]
Other articles published on May 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+