
தடை
இதனால் அவர்கள் சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஆயுள் தடை
மேலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு ஆயுட்கால தடையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இரண்டு அணிகளுக்குப் பதிலாக இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்க டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் இன்று திறக்கப்பட்டது.

புனே, ராஜ்கோட்
இதில் அடுத்த வருடம் (2016 சீசன்) புனே என்ற பெயரில் ஒரு அணியை நடத்துவதற்கான உரிமையை தொழிலதிபர் சஞ்சீவ் கோயன்காவின் நியூ ரைசிங் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் இன்டெக்ஸ் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கோட் அணியை வாங்கியுள்ளது.

ரூ.16 கோடி
புனே அணிக்கான உரிமத்தை வாங்குவதற்காக நியூ ரைசிங் நிறுவனம் பிசிசிஐக்கு 16 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும். இதேபோல் ராஜ்கோட் அணி உரிமையாளர் இன்டெக்ஸ், பிசிசிஐக்கு 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

15ல் ஏலம்
இந்த நிலையில் வரும் 15ம் தேதி புதிய அணிகள் ஏலத்தில் வீரர்களை எடுக்க உள்ளன. தலா 10 வீரர்களை இவ்விரு அணிகளும் ஏலத்தில் எடுக்க முடியும். இரு அணிகளுக்குமே குறைந்த பட்சம் ரூ.40 கோடி முதல் ரூ.66 கோடி வரை பட்ஜெட் அனுமதியுள்ளது. அந்த தொகைக்குள் வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

டோணி, ஜடேஜா
சென்னை அணி கேப்டன் டோணி 8 வருடங்கள் முன்பு பெரும் டிமாண்ட் உள்ள வீரராக இருந்தார். இம்முறை அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது தெரியவில்லை. அதேநேரம், ராஜ்கோட் அணி, உள்ளூர் வீரரான ரவீந்திர ஜடேஜாவை ஏலத்தில் பெற முயலும் என தெரிகிறது.

எதிர்பார்ப்பு
டிசம்பர் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை, மதியம் 12.15 மணியில் இருந்து ஏலம் தொடங்குகிறது., மும்பை கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் இந்த ஏலம் நடைபெறுகிறது. சென்னை ரசிகர்களுக்கும், ராஜஸ்தான் ரசிகர்களுக்கும் இந்த ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











