Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Playoff 2023 பந்தயம்.. 3 இடத்திற்கு 7 அணிகள் போட்டி.. சிஎஸ்கே எந்த இடம் பிடிக்கும்.. இதை பாருங்க

ஐபில் 2023 ஆம் ஆண்டு தொடர் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல திருப்பங்களையும் நெருக்கடிகளையும் அனைவருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் 7 லீக் ஆட்டம் தான் எஞ்சி இருக்கிறது. ஆனால் ஏழு அணிகளும் மூன்று இடத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

இதனால் ஒரு தோல்வியை சந்தித்தால் கூட பல அணிகள் நாக்அவுட் ஆக வாய்ப்பு இருக்கிறது. தற்போது குஜராத் அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் லக்னோவும் சிஎஸ்கே அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

IPL Playoff 2023 scenarios - which other 3 teams will finished at top 4

அப்படி இருவரும் தோற்றால் மும்பை பெங்களூரு பஞ்சாப் ஆகிய அணிகள் 14 புள்ளிகள் உடன் தொடரை முடிக்க வேண்டும் என இந்த அணி ரசிகர்கள் வேண்டிக் கொள்ள வேண்டும். மும்பை அணியை பொறுத்தவரை லக்னோ அணிக்கு எதிரான தோல்வி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மும்பை அணி தங்களது கடைசி லீக் ஆட்டமான ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டும்.

அதன் பிறகு பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் ரன் ரேட்டில் குறைவாக இருக்க வேண்டும் என மும்பை ரசிகர்கள் வேண்டிக் கொள்ளலாம். இதேபோன்று பெங்களூரு, லக்னோ, சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் தோற்று மும்பை அணி வெற்றி பெற்றால் அவர்கள் முதல் இரண்டு இடத்தை பிடிக்கலாம்.

IPL Playoff 2023 scenarios - which other 3 teams will finished at top 4

பஞ்சாப் அணியை பொறுத்தவரை அவர்கள் கடைசி இரண்டு லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று அதிக ரன் ரேட்டை பெற வேண்டும். பெங்களூர் அணியை பொறுத்தவரை அவர்களுக்கும் அதே நிலை தான் கடைசி இரண்டு லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற வேண்டும். ரன் ரேட்டும் அதிகமாக இருந்தால் அவர்களும் முதல் நான்கு இடத்தை பிடிக்க முடியும்.

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் அதிகபட்சமாக 14 புள்ளிகளை தான் பெற முடியும். எனினும் பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய ஆணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வியை தழுவினால் இவ்விரு அணிகளில் யார் அதிக ரன்கள் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு பிளே ஆப் சுற்றில் வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Wednesday, May 17, 2023, 18:33 [IST]
Other articles published on May 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+